காய்ச்சலை போக்கும் பவள மல்லி: இதன் மருத்துவ குணங்கள் தெரியுமா?

Report Print Gokulan Gokulan in வாழ்க்கை முறை

எத்தனை பேருக்கு பூக்களில் இருக்கும் மருத்துவ குணங்கள் தெரியும். ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் உள்ளன.

பவள மல்லியின் மருத்துவ குணங்கள் தெரியுமா உங்களுக்கு?

எப்பேர் பட்ட காய்ச்சலையும் பவள மல்லி குணப்படுத்திடும். பவள மல்லியை சில பேர் பாரிஜாதம் என்றும் அழைக்கின்றனர்.

மழை காலங்களில் கொசுக்கள் அதிகமாக வரும். கொசுவால் டெங்கு, மலேரியா காய்ச்சல் வந்தால் பவள மல்லியை கொடுத்தால் காய்ச்சல் படிப்படியாக குணமாகும்.

  • ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு, 10 பவள மல்லி இலையையும், பனங்கற்கண்டையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை மாலை இரு வேளையில் இந்த கசாயத்தை பருகினால் மூளைக் காய்ச்சல் , மூட்டுவலிகள் எல்லாம் சரியாகும்.
  • பவளமல்லி இலையில் கசாயம் செய்து சாப்பிட்டல் டைபாய்டு காய்ச்சல் குணமாகும்.
  • பவள மல்லியின் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் சேர்த்து காய்ச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.
  • இம்மர இலையைச் சுடுநீரில் போட்டு நன்றாய் ஊரவைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை அருந்து வர, முதுகுவலி, காச்சலை சரி செய்யும்.
  • வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து, அதனுடன் தேன் கலந்து அருந்தினால் பலன் கிடைக்கும்.
  • இதன் இலைகளை கொஞ்சம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காச்சி கொடுத்தால், இருதயம் வலுவுறும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்