101 கிலோ லிருந்து 70 கிலோவுக்கு வந்த சிம்பு! எப்படி உடல் எடை குறைத்தார்? ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை
3566Shares

சிலம்பரசன் ( சிம்பு) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இவருக்கு என தனி ரசிகர் பட்டளாமே உள்ளது.

சமீபத்தில் அவர் உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரை ஆச்சரியத்துள்ளாக்கியது.

ஏனெனில் சிம்பு உடல் எடையைக் குறைப்பதற்கு முன் 101 கிலோ இருந்திருக்கிறார். அதிலிருந்து 30 கிலோ எடையைக் குறைத்து 71 கிலோ வந்திருக்கிறார்.

அவருடைய இந்த திடீர் மாற்றம் பல இளைஞர்களுக்கு ஊக்குவிப்பாகவும் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கின்றது.

இவை எல்லாவற்றையும் விட எப்படி இவர் உடல் எடையைக் குறைத்தார் என்பதுதான் பலருடைய சந்தேகமாகவும் உள்ளது.

அந்தவகையில் சிம்பு எப்படி உடல் எடையை குறைத்தார் என்று இங்கு பார்ப்பாம்.

எப்படி உடல் எடை குறைத்தார்?

சிம்புவுடைய இந்த ஃபிட்னஸ் பயணம் குறித்து ஃபிட்னஸ் ட்ரெய்னர் சந்தீப் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுவதாவது,

நான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் சிம்புவை சந்தித்தேன். அப்போது அவர் 101 கிலோ இருந்தார்.

சிம்புவுக்கு தொப்பையைக் குறைக்க வேண்டும் என்பதே முதல் விருப்பமாக இருந்தது. அதேசமயம் அவர் ஒரே உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யாமல் தினமும் புதிது புதிதாக ஆக்டிவிட்டீஸ் செய்ய நினைப்பவர்.

எனவே அவருக்கு ஏற்றார்போல் புதுபுது பயிற்சிகளுடன் களத்தில் இறங்கினோம். கடந்த 2 மாதங்காகத்தான் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டோம்.

தினமும் அவர் காலை 4.30 மணிக்கு தன் பயிற்சியை ஆரம்பிப்பார். வேக வேகமாக நடை பயிற்சி மேற்கொண்டார்.

ஆரம்பத்தில் வாரத்தில் நான்கு நாட்களும்,தற்போது 5 நாட்கள் என பயிற்சி அளித்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

பிப்ரவரி மாதம் வரை 87 கிலோ இருந்த சிம்பு லாக்டவுனில் மீண்டும் எடை கூடிபின் ஜூன் மாதத்திலிருந்து தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது அவர் 71 கிலோ இருக்கிறார் என்று சந்தீப் கூறியுள்ளார்.

உணவு முறை

  • சிம்பு உணவு விஷயத்திலும் மிகவும் கட்டுப்பாடோடு இருந்ததாக கூறப்படுகின்றது.

  • சிம்பு ஜங்க் ஃபுட், அசைவ உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார். அல்கலைன் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளுக்கு மாறினார்.

  • கலோரி குறைவான உணவுகளைதான் தேர்வு செய்து சாப்பிட்டார்.

  • குறிப்பாக திரவ வகை உணவுகளைதான் அதிகமாக சாப்பிட்டார். பழ வகைகளில் கூட சாலட் சாப்பிடாமல் ஜூஸாக சர்க்கரை இல்லாமல் குடித்தார்.

  • அதிக புரோட்டீன் நிறைந்த மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவு என முற்றிலும் தன் உணவுப் பழக்கத்தையே மாற்றிக்கொண்டார்.

விளையாட்டு

  • சிம்பு நிறைய விளையாட்டு ரீதியான பயிற்ச்சிகளைத்தான் அதிகம் விரும்புவார். அப்படி அவர் டென்னிஸ், பாக்ஸிங், ரோவிங், ஸ்விம்மிங் , பேஸ்கெட் பால் என இந்த விளையாட்டுகளை அதிகமாக விளையாடுவார்.

  • சென்னையில் சிறந்த குத்துச்சண்டை வீரரான சுதர்ஷன் அண்ணாதுரைதான் சிம்புவுக்கு பாக்ஸிங் பயிற்சி அளித்தார். சரவணன் என்பவர் டென்னிஸ் பயிற்சி அளித்துள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்