பேரழிவுகள் அடுத்த சில வருடங்களில் நம்மை முற்றாக அழித்துவிடலாம்

Report Print Givitharan Givitharan in வாழ்க்கை
பேரழிவுகள் அடுத்த சில வருடங்களில் நம்மை முற்றாக அழித்துவிடலாம்

அண்மையில் ஸ்வீடிஷ் உலகளாவிய சவால்கள் அறக்கட்டளை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து வெளியிட்ட உலக பேரழிவு அபாயங்கள் 2016 அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் கடந்க வருடத்தில் மனித வாழ்க்கைக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய அழிவுகளை அடையாளப்படுத்தியுள்ளனர்.

இயற்கை அனர்த்தங்கள் அண்மைக்காலங்களில் ஏற்படாவிட்டாலும் வரலாற்றில் இவ்வகை அனர்த்தங்கள் ஏற்பட்டமைக்கு சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன.

உதாரணத்திற்கு 14 ஆம் நூற்றாண்டில் பிளக் டெத் தெற்று மூலம் 200மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர், இது மொத்த சனத் தொகையில் 20வீதமாகும்.

அண்மையில் 1918 காலப்பகுதியில் ஸ்பானிஷ் காய்ச்சலால் பிட்டத்தட்ட 3-5 வீதமான மக்கள் இறந்துள்ளனர்.

வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அடுத்த 5 வருடங்களுக்கு தொற்று நோயானது மிகப்பெரிய சவாலாக அமையலாம் எனவும், இது இயற்கையாக அல்லது மனித தலையீட்டினால் உருவாகலாம் எனவும் நம்பப்படுகிறது.

அடுத்து உலகளாவிய காலநிலை மாற்றம், இதுவும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்எனவும் கருதுகின்றனர்.

இதேபோல எரிமலை வெடிப்புகளாலும் சிறிதளவில் பாதிப்புகள் ஏற்படலாம். இவ் அனர்த்தங்கள் தற்போதைய சந்ததியை பாதிக்காவிடினும், நம் வருங்கால சந்ததியினருக்கு நிச்சயம் சவாலாக அமையும்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments