கைகளை இணைக்கும் இதய ரேகைகள் உங்களுக்கு இருக்கா? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Report Print Printha in வாழ்க்கை

மனிதர்களின் கை, கால்களில் இருக்கும் ஒவ்வொரு ரேகைக்கும் பல பல பெயர்கள் மற்றும் அர்த்தங்கள் மறைந்துள்ளது.

இப்படி பார்க்கும் போது ஒரு சிலரின் கைகளில் இருக்கும் இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால், அவர்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை என்று அர்த்தமாகும்.

ஆனால் இது மாதிரியான இதய ரேகைகள் அனைவருக்கும் சமமாக அமையாது.

இந்த இதய ரேகை என்பது இதயத்தை பற்றி குறிப்பது அல்ல. ஒவ்வொருவரின் இதயத்தில் தோன்றும் காதல் வாழ்க்கையை குறிப்பதாகும்.

இதயரேகை பற்றிய சில தகவல்கள்

நமது கையில் உள்ள இந்த இதய ரேகையின் அளவு மற்றும் அமைப்பைக் கொண்டு தான், ஒருவரது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறிக்கிறது என்று கைரேகை ஜோதிடர்கள் கூறுகின்றார்கள்.

நம்முடைய வலது மற்றும் இடது கைகளை ஒன்றாக வைக்கும் போது நம் கையை இணைக்கும் இதய ரேகைகள் ஒரே மாதிரி சம அளவில் இருந்தால், அவர்களுக்கு துணையாக வருபவர்கள், அவர்கள் மீது கொள்ளை பிரியம் வைத்து, அவர்களை நன்கு புரிந்து, அனுசரித்து நடந்து கொள்பவர்களாக இருப்பார்கள்.

வலது கையின் இதய ரேகை உயரமாக இருப்பதற்கான அர்த்தம்

இடது கையை விட வலது கையின் இதய ரேகை உயராமாக இருந்தால், அவர்களுக்கு அமையும் காதலன் மிகவும் நல்லவராக இருப்பார்.

மேலும் அவர் காதலுக்காக எதையும் செய்யக் கூடியவராகவும், மற்றவர்களைப் பற்றி எதையும் யோசிக்காமல், தன் இதயம் சொல்வதை மட்டுமே செய்வார்கள்.

இதனால் இவர்கள் சொந்த வரையறையில் வாழ்க்கையை வாழ விரும்புவதுடன், மற்றவர்களின் கருத்துக்களின் மீது அக்கறை கொள்ளமாட்டார்கள்.

இடது கையின் இதய ரேகை உயரமாக இருப்பதற்கான அர்த்தம்

வலது கையை விட இடது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால் அவர்கள் மிகவும் ஆக்கிரோஷ குணம் கொண்டதால், சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.

மேலும் இவர்கள் தனக்கு வரும் துணையின் மூலம் தன் வாழ்க்கை முழுமை அடையும் என்பதை உணரமாட்டார்கள்.

எனவே இவர்கள் எதற்கும் அஞ்சாமல், காதலுக்காக யார் பின்னடியும் செல்லமாட்டார்கள். ஆனால் இவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சிகரமாக இருப்பார்கள்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments