மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழ உதவும் மிகச்சிறந்த 16 வழிகள்

Report Print Jayapradha in வாழ்க்கை
82Shares

இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்படும் மன அழுத்தம் ஒருவகை என்றால், பெரியவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் இன்னொரு வகை.

இவ்வாறு மன அழுத்தம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்ட நிலையில், அதனைக் குறைக்கும் வழிகளை நாடுவதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்
 • தினமும் காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடும் பழக்கத்தை வளார்த்து கொள்ளுங்கள்.
 • ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
 • நீண்ட நேரம் காத்திருப்பது போது ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். மேலும் தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
 • தினமும் செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளி போடமால் அன்றைக்கே செய்து முடித்தால் மன அழுத்தத்தை அதிகரிக்கமால் பார்த்து கொள்ள முடியும்.
 • காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமாக காஃபி , டீ குடிப்பதைத் தவிருங்கள்.மேலும் இரவு நேரங்களில் புகை மற்றும் மது அருந்தாதீர்கள்.
 • எப்பொழுதும் ஒரு செயலை செய்யும் பொழுது முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
 • எங்கு சென்றாலும் சற்று முன்கூட்டியே செல்ல பழகி கொள்ளுங்கள். மேலும் பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
 • சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ அதிக மன வருத்தம் அடையாமல் செய்து முடித்து விடலாம் என்று எண்ணுங்கள்.
 • ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
 • சில இடங்களுக்கு புதிதாக செல்லும் பொழுது அந்த இடங்களின் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
 • உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
 • செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்
 • தினமும் இரவில் நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.
 • வீட்டில் உள்ள பொருட்களை ஒழுங்காக இடத்தில் அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.
 • தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள்.
 • பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.
 • வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்