உங்கள் உடல் அதிக பாதிப்பில் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் இதுதான்

Report Print Jayapradha in வாழ்க்கை

ஒருவரின் உடலின் வெளிப்புற தோற்றத்தை மட்டும் வைத்தே அவர்களின் உடல் ஆரோக்கியமாக உள்ளது என சொல்லிவிட முடியாது.

மேலும் உடலில் அதிக பாதிப்புகள் உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்பதைப் பற்றி இங்கு தெளிவாக பார்ப்போம்.

உடல் எடை

ஒருவருக்கு உடல் எடை திடிரென அதிகரித்தால் இதற்கு காரணம் கார்டிசோல் என்கிற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் தான். மேலும் கார்டிசோல் அளவில் சீர்கேடு ஏற்பட்டால் உடல் எடை கூடும்.

முடி கொட்டுதல்

தலை முடி கொட்டுதல் ஒரு இயற்கையான நிகழ்வு. ஆனால் ஒருவர் அதிக அழுத்தத்தில் இருந்தால் தலை முடி கொட்ட தொடங்கும். முன்பை விட இப்போது அதிக முடி கொட்டுகிறதென்றால் அதற்கு மன அழுத்தம் தான் காரணம்.

கவனமின்மை

ஒரு சிலர் வேலை செய்யும் பொழுது அவர்களின் முழு கவனமும் வேறு ஒரு நிகழ்வில் இருக்கும் இதற்கு காரணம் கவனமின்மைதான். இதற்கு முக்கிய காரணம் அதிக மன அழுத்தம் தான்.

இதய நோய்கள்

இதயம் சார்ந்த ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு காரணாம் நீங்கள் அழுத்துடன் பல நாட்கள் உள்ளீர்கள் என்பதை உணர்த்துகிறது.

தாம்பத்தியத்தில் பிரச்சனை

தனது இணையுடன் உடலிறவு வைத்து கொள்வதில் திடீரென்று விருப்பம் இல்லை என்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. மேலும் இவை நீங்கள் அதிக அழுத்தத்தில் உள்ளீர்கள் என்பதை குறிக்கும்.

தூக்கமின்மை

ஒரு மனிதனுக்கு 7 மணி நேர தூக்கம் நிச்சயம் அவசியம். ஆனால், நீங்கள் மன அழுத்தத்துடன் இருந்தால் தூக்கம் வராத பிரச்சினை கட்டாயம் இருக்கும்.

தலைவலி

அதிக அழுத்தம் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் தந்தால் தலைவலி அடிக்கடி ஏற்பட கூடும். அதிக வேலை பளுவால், அதிக அழுத்தம் ஏற்பட்டாலும் இது போன்று நடக்கும்.

தோல் நோய்கள்

உடலில் ஏற்படுகின்ற அழுத்த நிலை தோல் நோயாக வெளிப்படுமாம். திடீரென்று உடலில் சொறிகளோ, முகப்பருக்களோ, தோல் சார்ந்த நோய்கள் வந்தால் கொஞ்சம் கவனமான இருக்க வேண்டும்.

இரைப்பை கோளாறுகள்

இன்று சிலருக்கு எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாதது போன்றும், மலச்சிக்கல் ஏற்படுவதும், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படும்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்