67 வயதிலும் சூப்பர்ஸ்டார் ஸ்டைலாகவும், துடிப்புடனும் இருப்பதற்கு இதுதான் காரணமாம்!

Report Print Jayapradha in வாழ்க்கை

சூப்பர்ஸ்டார், தலைவர் இப்படி பல பெயர்களின் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த அவர்கள். பல தரப்பட்ட படங்களில் மிகவும் ஸ்டயிலான நடிப்பு திறனை காட்டி வருகின்றார்.

பொங்கலுக்கு ரிலீசாக போகின்ற பேட்ட படத்தில் தலைவர் இவ்வளவு இளமையாக இருப்பதற்கு காரணம் என்ன என்பது பலருக்கு வியப்பாக இருக்கும். தலைவரின் இந்த ரகசியத்திற்கு என்ன காரணம் என அறியலாம்.

பல வகையான நடிப்பு திறனை தன்னுள்ளே வைத்து கொண்டிருப்பவர் தலைவர் அவர்கள். ஆரம்ப காலத்தில் இருந்தே தனது தனித்துவமான நடிப்பாற்றலாலே நம் எல்லோரையும் கட்டி போட்டவர் சூப்பர் ஸ்டார் தான்.

இந்திய சினிமா துறையில் பலருக்கு பல வித நடிப்பு திறன் இருக்கின்றன. ஆனால், தலைவருக்கு என்று ஒரு தனி இடம் எப்போதும் இருக்கும். அதற்கு முழுக்க முழுக்க காரணம் அவரின் ஸ்டைல் தான்.

தலைவர் 40 வயதை கடந்த பிறகு சர்க்கரை சேர்த்த உணவுகள், பால் சார்ந்த உணவு பொருட்கள், ஆகியவற்றை அறவே ஒதுக்கி வைத்து விட்டாராம். இந்த உணவு கட்டுப்பாடுகளால் தான் 2.0 போன்ற படங்களில் அயராது உழைக்க முடிந்தது.

தலைவர் எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் இருக்க ஒரு சில யோகா பயிற்சிகளை கடைபிடித்து வருகின்றாராம். இவை நிம்மதியையும், ஆழந்த தூக்கத்தையும் தந்து ஆரோக்கியமான உடல் நலத்துடன் இவரை வைக்கிறதாம்.

இன்றும் நடிப்பின் உச்சத்தில் தலைவர் இருக்க முக்கிய காரணம் தினமும் 5 மணிக்கு எழுந்து வாக்கிங், ஜாகிங், தியானம் போன்றவற்றை மேற்கொள்வது தான் இதற்கு காரணமாம்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்