இந்த திகதிகளில் பிறந்தவர்களை கல்யாணம் பண்ணிக்கோங்க.. வாழ்க்கை அமோகமா இருக்கும்!

Report Print Kabilan in வாழ்க்கை

காதல் திருமணமாக இருந்தாலும், நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் மணமக்களின் பிறந்த திகதி திருமண வாழ்வில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்று இங்கு பார்க்கலாம்.

பிறந்த திகதிகள்: 1, 10, 19, 28

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே தலைமை பண்பு உள்ளவர்களாக இருப்பார்கள். தான் செய்யும் அனைத்திலும் தாம் தான் வழிநடத்த வேண்டும் என்று இவர்கள் விரும்புவார்கள். இந்த நபர்கள் மேலாதிக்கம் அதிகம் உள்ளவர்கள்.

இவர்கள் எப்போதும் தங்கள் துணையை ஆள வேண்டும் என்று நினைப்பார்கள். எப்போதும் காதலை விட்டுக்கொடுக்காத இவர்களின் நீண்ட நாள் காதல் இந்தாண்டு நிறைவேறும். திருமணம் ஆனவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.

பிறந்த திகதிகள்: 2, 11, 20, 29

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் பொதுவாக அமைதியானவர்களாகவும், அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். மனரீதியான தொடர்பில் இருப்பதை விட உறவில் இருப்பதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.

உணர்வுரீதியாக இணைந்திருப்பதை விட, உடல்ரீதியாக இணைந்திருப்பதை இவர்கள் அதிகம் விரும்புவார்கள். இவர்களின் மாறிக்கொண்டே இருக்கும் மனநிலையை சமாளிப்பது மிகக் கடினம். இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்வில் தன்னிறைவு பெற்றவர்களாக இருப்பார்கள்.

பிறந்த திகதிகள்: 3, 12, 21, 30

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் உறவுகளில் மிகவும் யதார்த்தத்தை கடைபிடிப்பார்கள். தனது மனதை விட மூளை சொல்வதையே கேட்கக் கூடிய இவர்கள், வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ளக் கூடியவர்கள்.

இவர்கள் அவ்வளவாக காதலிக்க தெரியாது என்பதால், காதலிக்க தெரிந்த ஒருவருடன் உறவில் இருப்பது உறவில் சமநிலையை ஏற்படுத்தும்.

பிறந்த திகதிகள்: 4, 13, 22, 31

இவர்கள் எப்போதும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்பவர்கள். இவர்களிடம் நிச்சயம் ஒரு தனித்துவமான குணம் இருக்கும். தங்கள் துணைக்கு எப்போது இவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். தங்களது உறவுகளை காப்பாற்றிக்கொள்ள எப்போதும் கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக நடந்து கொள்வார்கள்.

பிறந்த திகதிகள்: 5, 14, 23

இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு முன் நிறைய காதல்கள் இருக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு சில காலத்திலேயே உறவுகளில் சலிப்பு ஏற்பட்டுவிடும். காதலிப்பதிலும், பாலுறவிலும் அதிக நாட்டம் உடையவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.

பிறந்த திகதிகள்: 6, 15, 24

இவர்கள் அமைதி மற்றும் காதலை விரும்புபவர்கள் ஆவர். வசீகரமும், அதீத காதலும் இவர்களின் சிறப்புகளாகும். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படுவது இவர்களின் பலவீனமாகும். இவர்களின் மனதை எளிதில் மாற்றிவிட முடியும் என்பதால், இவர்களின் திருமண உறவிற்கு வெளியே வேறு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

பிறந்த திகதிகள்: 7, 16, 25

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் பொதுவாக குறைவாக பேசக்கூடியவர்கள். அதற்காக அவர்கள் காதலிக்க தெரியாதவர்கள் என்று அர்த்தமல்ல. இவர்கள் சிறந்த வாழ்க்கைத்துணையாக இருக்க, தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். சிறிய விடயங்களை கூட அதிகம் ஆராய்ந்து தலைபாரத்தை இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

பிறந்த திகதிகள்: 8, 17, 26

இவர்கள் வலிமையானவர்களாக இருந்தாலும், அதிக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். ஆனால், இவர்கள் அனைவராலும் பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுவார்கள்.

தங்கள் துணையை தேர்ந்தெடுக்கவும், அவர்களுடன் முழுமையாக இணையவும் இவர்கள் அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், ஒருமுறை இணைந்துவிட்டால் அதன்பின்னர் பிரியவே மாட்டார்கள்.

பிறந்த திகதிகள்: 9, 18, 27

இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு கோபமும், ஆற்றலும் அதிகம் இருக்கும். இவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள். ஆனால் அதனை ஒருபோதும் வெளிக்காட்டி கொள்ளமாட்டார்கள்.

இவர்களுக்கு உடலுறவில் அதிகளவு விருப்பம் இருக்கும் என்பதால், தங்களது துணையும் அதற்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்கு சரியான துணை அமைந்துவிட்டால் அவர்களை அணு அணுவாய் காதலிப்பார்கள்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்