மூன்று முறை தூக்கு மேடை வரை சென்று உயிர் பிழைத்து நபர்: இது ஒரு சிறை கைதியின் அனுபவம்…!

Report Print Abisha in வாழ்க்கை

மலாவி நாட்டில் ஒருவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்றுமுறை ஏறத்தாழ தூக்கில் போடப்படும் நிலை வரை சென்று தப்பி கொண்ட, தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

1992ஆம் ஆண்டு. தெற்கு மலாவியில், ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த பைசன், தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க் நகரில் காஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சிறுது காலத்திற்கு பின் சொந்த ஊர் திரும்பி அவர், சொந்தமாக நிலம் ஒன்று வாங்கி உள்ளார். ஐந்து பேரை வேலைக்கு அமர்த்தி, பழங்கள், கோதுமை, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை சாகுபடி செய்தார். இந்நிலையில் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

அவருடைய வேலையாட்களில் ஒருவரை, அருகில் வசித்தவர்கள் தாக்கியுள்ளனர். அதில் தொழிலாளி மிக மோசமாகக் காயம் அடைந்திருக்கிறார்.

உதவி இல்லாமல் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரை கழிவறைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்த பைசன், கன மழையால் வழுக்கலாக இருந்த படிகளில் சென்றபோது, கீழே விழுந்து வேலையாளை கீழேவிட்டுவிட்டார். பிறகு மருத்துவமனையில் அந்தத் தொழிலாளி இறந்துவிட்டார். இதனால் பைசன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்நிலையில், அருகில் வசித்தவர்கள் பைசனுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சிஅளித்துள்ளனர்.

இது குறித்து பேசிய பைசன் ''தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பகுதிக்கு நீங்கள் போகலாம், உங்களை தூக்கில் போடுவதற்கான நேரம் வரும்வரையில் காத்திருக்க வேண்டும்,'' என்று எனக்கு சொல்லும்போது, ஏற்கெனவே மரணித்துவிட்டதைப் போல உணர்ந்தேன்.

''அந்த சமயத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒருவர் மட்டுமே இருந்தார். தென்னாப்பிரிக்கரான அவர் அந்தப் பகுதியில் பல நாடுகளுக்குச் சென்று தூக்கு தண்டனையை நிறைவேற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவர் மலாவிக்கு வருவார். அந்த நேரத்தை அறிந்து கொள்ளும் கைதிகளில் சிலர் தப்பி ஓடிவிடுவார்கள்.''

பிற்பகல் ஒரு மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் தொடங்கும் என்றும், நீங்கள் ''பிரார்த்தனை செய்யத் தொடங்கலாம்'' என்றும் பாதுகாவலர் ஒருவர் கூறினார்.

மாலை நான்கு மணிக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் தன் வேலையை நிறுத்தும் வரையில் அவர்கள் தொடர்ந்தனர். ஆனால் பட்டியலின் கடைசி வரை அவரால் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. பைசன் உள்ளிட்ட மூன்று பேர், அவர் திரும்பி வரும் வரையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

''அந்த இயந்திரத்தை இயக்கக் கூடியவர் அவர் ஒருவர் மட்டும்தான். அன்றைய நாள் சோர்ந்து போனதால் அடுத்த மாதம் வருகிறேன் என்று அவர் கூறிவிட்டதாகத் தெரிகிறது,'' என்கிறார் பைசன்.

அடுத்த இரண்டு முறைகளும் அதைப் போலவே நடந்ததுள்ளது.

பிறகு 2007ல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கு, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

பைசனை நீதிமன்றத்துக்கு திரும்பவும் அழைத்து வர வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியபோது, முதல் அனுபவத்தால் பயந்து போயிருந்த அவர், ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்பு காட்டியிருக்கிறார். ஆனால், பிறகு அவர் பிடிவாதத்தை விட்டு நீதிமன்றத்துக்குச் சென்றார். அவரை விடுதலை செய்வதாகவும், உடனடியாக அவர் வெளியே போகலாம் என்றும் நீதிபதி கூறியபோது அவர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

2015ல் பைசனுக்கு மறு தீர்ப்பு கூறியபோது, அவர் நீதிமன்றம் செல்லவில்லை. ஆனால் அவர் உறவினர் ஒருவர் அங்கு இருந்தார். இந்தச் செய்தியை தொலைபேசி மூலம் பைசனின் தாயார் லூசியிடம் அவர் தெரிவித்துள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்பதை சிறிது நேரம் லூசியால் நம்ப முடியவில்லை. பிறகு ``ஆட்டுக் குட்டியைப் போல துள்ளிக் குதித்தேன். என் மனம் மகிழ்ச்சியால் நிரம்பிவிட்டது'' என்று லூசி கூறினார்.

குறைந்த பாதுகாப்பு உள்ள ஓர் இல்லத்துக்கு பைசன் அழைத்துச் செல்லப்பட்டார். 23 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு, இயல்பான வாழ்வுக்கு ஏற்றவாறு அவரை தயார்படுத்திக் கொள்வதற்கு, புதிய தொழில் திறன்கள் கற்பிக்கப்பட்டன. ஏற்கெனவே 60 வயதை அவர் கடந்துவிட்டார். அந்த இல்லத்தில் இருந்தவர்களில் அதிக வயதானவர் இவராகத்தான் இருந்தார்.

இதே அனுபவத்தில் உள்ள மற்ற முன்னாள் கைதிகளுக்கு ஆலோசனைகள் கூறுவதற்காக, வார இறுதி நாட்களில் தன்னார்வலராக இப்போது அவர் சென்று வருகிறார் என்பதுஅவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்