உலக பொருளாதார வளர்ச்சிக்காக தங்கள் உரிமைகளை இழக்கும் பூர்வகுடிகளின் நிலை!

Report Print Kavitha in வாழ்க்கை

வணிக வளர்ச்சியால் பூர்வகுடிகள் தங்களின் வாழ்வாதாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதைபற்றிய சில தகவல்கள்

உலகம் முழுவதும் சுமார் 37 கோடி பூர்வகுடிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்போது நடந்து வரும் வணிக வளர்ச்சி மற்றும் காடுகளை அழிப்பதால் பூர்வகுடி மக்களின் நிலத்தை பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

இதனால் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

இதில் முதல் அச்சுறுத்தல் நில உரிமையாகும். இந்த நில இழப்பு சில நேரங்களில் உயிரிழப்பையும் விளைவிக்கின்றது.

அமெரிக்காவில் தங்கள் பூர்விக நிலங்களில் எண்ணெய் குழாய்களை பதிப்பதற்கு எதிரான ஸ்டேன்டிங்ரா போராட்டத்தில் இருந்து ஆஸ்திரேலியா உலுரு பகுதியின் மீது பாரம்பரியமாக உரிமை கொண்டிருந்து ஆனாங்கோ இன மக்கள் எதிர்கொண்டது வரை பூர்வ குடி மக்கள் அடிக்கடி சட்டச்சிக்கலை சந்திக்கின்றனர்.

இந்த சமூகங்கள் தாங்கள் காலங்காலமாக வாழ்ந்து நிலங்களை தக்கவைத்து கொள்ள போராட வேண்டிய நிலைமை உள்ளது.

இரண்டாவதாக இருக்கும் அச்சுறுத்தல் “சுற்றுச்சுழல் ” எனலாம்.

உலகின் 80 சதவீத பல்லுயிர் பெருக்கம் பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளிலேயே அமைந்துள்ளது.

அமெசானில் பழங்குடிகள் மழைக்காடுகளை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.

கால்பந்து மைதானம் அளவில் இருக்கும் மழைகாடுகள் ஒவ்வொரு நிமிடமும் அழிக்கப்படுகின்றன.

பூர்வகுடிகளுக்கு மூன்றாவதாக இருக்கும் அச்சுறுத்தல் அவர்களுக்கான அங்கீகாரமே.

உலக நாடுகளின் அரசுகள் பூர்வகுடிகளே தாங்கள் வசிக்கும் பகுதிகளில் முதன் முதலில் குடியேறிவர்கள் என்பதை அங்கீகரித்து அவர்களின் உரிமைகள் மற்றும் சமூக நிலை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தின் உள்ளன.

பூர்வகுடி இனங்களை சேர்ந்தவர்கள் “பூர்வகுடி” என்று அலுவல் பூர்வமாக அரசமைப்பு சட்டத்தில் அங்கீகாரம் வழங்க வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஆஸ்திரேலியா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

பூர்வகுடிகளின் நான்காவது அச்சுறுத்தல் அவர்களின் “பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்” ஆகும்.

உலகில் வாழும் பூர்வ குடிகளில் 70% போர் ஆசிய கண்டத்தில் வாழ்கின்றார்கள்.

அவர்கள் வாழும் பகுதிகளில் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் செழுமைப்படுத்த அவர்கள் பங்காற்றி வருகின்றனர்.

உலகில் உள்ள 7000 மொழிகளில் பாதி அளவு மொழிகளை பூர்வகுடிகளே பேசுகின்றனர்.

ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும் ஒரு பூர்வகுடி மொழி அழிந்து வருகிறது என ஐ.நாவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பூர்வகுடிகளின் ஐந்தாவது மற்றும் கடைசியாக மிகப்பெரிய அச்சுறுத்தல் பூர்வகுடிக்கான “வளங்கள் மற்றும் முதலீடுகள்” ஆகும்.

உலக மக்கள் தொகையில் பூர்வகுடிகள் வெறும் 5% தான். ஆனால் உலகில் வறுமையில் வாடும் மக்களில் 15% பேர் பூர்வகுடிகளாக உள்ளனர்.

பூர்வகுடி மக்களின் விழுமியங்கள் மற்றும் பண்பாட்டை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதனால் பல கோடி மக்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கவும் தன்னாட்சி அதிகார உரிமை மிக்கதாக மாற்றும் என ஐக்கிய நாடுகள் சபை நம்புகின்றது.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்