ஜோதிடர் பேச்சை கேட்டு பெண் சபலத்தால் வீழ்ந்த சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கை! சாதித்த தமிழர் சரிந்த இடம்

Report Print Raju Raju in வாழ்க்கை
0Shares

குடிசை வீட்டில் பிறந்து தனது கடின அழைப்பால் பிரமிக்க தக்க வகையில் தனி சம்ராஜ்ஜியத்தை நடத்திய ராஜகோபாலில் வாழ்க்கை பல்வேறு ஏற்ற இறக்கங்களை கொண்டது.

சரவணபவன் உணவகத்துக்கு லண்டன், சிட்னி, நியூயோர்க் என உலகெங்கிலும் பல கிளைகளும் உள்ளன.

1947 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் புன்னையாடி என்ற கிராமத்தில் இருந்து வந்தவர் ராஜகோபால்.

ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், வயிற்றுப் பிழைப்புக்காக ஹொட்டலில் மேசையை துடைக்கும் வேலையை செய்துள்ளார். அப்படியே மெதுவாக டீ போட கற்றுக்கொண்ட இவர், நாளடைவில் ஒரு மளிகை கடையில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

பின்னர் சிறிய ஹொட்டல் தொடங்கிய ராஜகோபால் படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தார்.

சென்னை கேகே நகரில் 14-12-1981ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட சரவணபவன் இன்று உலகின் பல இடங்களிலும் விரிவடைந்து தற்போது 91 கிளைகளுடன் வெற்றிச் சாம்ராஜியமாக உள்ளது.

சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டொலர் ஆகும்.

இவ்வளவு பெருமைகளை கொண்ட ராஜகோபால் பெண் சபலத்தால் வாழ்க்கையில் வீழ்ந்தார் என்றால் நம்பமுடிகிறதா?

ராஜகோபாலுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஜீவஜோதி என்ற பெண்ணின் தந்தை சரவணபவனில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் ஜீவஜோதியோ தான் டியூசன் படிக்கச் சென்ற இடத்தில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் மீது காதல் வயப்பட, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ராஜகோபாலில் ஆஸ்தான ஜோதிடர்கள், ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் புகழின் உச்சிக்கு சென்றுவிடலாம் என்று கூற, இதனால் அவரை திருமணம் செய்ய துடித்தார். ஆனால் அதற்கு ஜீவஜோதி மற்றும் பிரின்ஸ் மறுக்கவே, பிரின்ஸை கொலை செய்ய முடிவு செய்தார் ராஜகோபால்.

அதன் படி 2001-ஆம் ஆண்டு பிரின்ஸ் கொலை செய்யப்பட்டு கிடக்க, இதற்கு காரணம் ராஜகோபால் தான் என்று ஜீவ ஜோதி புகார் கொடுக்கிறார். ஆனால் ராஜகோபால் தரப்போ தொழில் போட்டி காரணமாக யாரோ செய்கின்ற சதி' என்று ராஜகோபால் தரப்பினர் கூறிவந்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தவழக்கில் ராஜகோபால், அவரது மேலாளர் டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பொலிசாரிடம் டேனியல் கொடுத்த வாக்குமூலமே இந்த கொலைக்கு முக்கிய சாட்சியாக இருந்தது. ஏனெனில் அவனைத் தான் முதலில் பிரின்சை கடத்தச் சொல்லி கொலை செய்துவிடுமாறு ராஜகோபால் கூறியுள்ளார்.

டேனியல் பிரின்ஸ் தன்னுடன் வேலை பார்த்தவர், தெரிந்தவர் என்பதால், பரிதாபத்துடன் விட, அதன் பின் வேறொரு ரவுடி கும்பலை வைத்து ராஜகோபால் கொலை செய்துள்ளார்.

இந்த வாக்குமூலம்தான் வழக்கை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் சென்றது. வழக்கு விசாரணையின் முடிவில், 2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் தண்டனையும் 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது.

இந்த வழக்கிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக ராஜகோபால் தரப்பினர் ஜீவஜோதியிடம் சமாதானம் பேச முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு ஜீவஜோதி உடன்பட மறுக்க, அதன் பின் அவரை கடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆனால் ஜீவஜோதியின் கிராமத்தினர் இதை கண்டுபிடித்துவிட்டதால், ஜீவஜோதியிடன் கடத்தல் முயற்சியும் கைவிடப்பட்டுவிடுகிறது.

இதனால் ராஜாகோபால் மீது கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த கடத்தல் வழக்கி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஜீவஜோதி தண்டாயுத பாணி என்பவரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ராஜாகோபால் தரப்பினர் தன்னை கடத்தவில்லை, அதைப் பற்றி நினைவே இல்லை என்று திடீர் அந்தர்பல்டி அடிக்க அந்த வழக்கிலிருந்து ராஜகோபால் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் சாந்தகுமார் கொலை வழக்கில் சாட்சியங்கள், வாக்குமூலம் போன்றவை நல்ல ஸ்ட்ராங்காக இருந்ததால், கடந்த 2009-ஆம் ஆண்டு வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் முதலில் கீழ் நிதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக 10 ஆண்டுகள் வழங்கிய சிறை தண்டனையை ஆயுள்தண்டனையாக வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அவர் வெளிநாடு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபால் மீதான ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் கடந்த 2019ல் உறுதி செய்தது. சிறை செல்வதற்கு எதிராக அவர் கடுமையாக போராடி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் திகதியன்று மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி சிறை செல்வதை தவிர்க்க அவர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

ஆனால் அவர் உடல்நிலை மோசமாகவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 2019 ஜூலை 18ஆம் திகதி ராஜகோபால் உயிரிழந்தார்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்