உடன் பிறந்த 3 தங்கைகளை கற்பழித்த அண்ணன் கைது

Report Print Peterson Peterson in மலேசியா
584Shares
584Shares
ibctamil.com

மலேசியா நாட்டில் உடன் பிறந்த 3 தங்கைகளை கற்பழித்த அண்ணனை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மலேசியாவில் உள்ள Kuala Muda நகரில் பெயர் வெளியிடப்படாத 18 வயதான வாலிபர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். பெற்றோருக்கு இவருடன் சேர்த்து 12 பிள்ளைகள்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த 8 வயதான தங்கையை இழுத்துச் சென்று துடிதுடிக்க கற்பழித்துள்ளான்.

அண்ணனின் செயலால் அதிர்ச்சி அடைந்த தங்கை மறுநாள் தனது தாயாரிடம் புகார் அளித்துள்ளார்.

மகளின் புகாரால் அதிர்ச்சி அடைந்த தாயார் பொலிசாரிடம் தெரித்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஏற்கனவே 9 மற்றும் 14 வயதுடைய இரண்டு தங்கைகளை கற்பழித்தது தெரியவந்துள்ளது.

இருவரும் கற்பழிக்கப்பட்டபோது தாயாரிடம் கூறியுள்ளனர். ஆனால், இருவரும் விளையாட்டாக புகார் கூறுகின்றனர் என எண்ணிய தாயார் அதனை கண்டுக்கொள்ளவில்லை.

ஆனால், மூன்றாவதாக 8 வயது மகள் புகார் கூறியபோது தான் தனது மூத்த மகனின் கொடூரச்செயல் தாயாருக்கு தெரியவந்துள்ளது.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்