கிம் ஜாங் சகோதரர் கொலை வழக்கு: இரண்டு பெண்கள் கைது

Report Print Raju Raju in மலேசியா
136Shares
136Shares
ibctamil.com

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நாமின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

வடகொரியாவின் தலைவரான சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நாம் கடந்த பிப்ரவரி 13ம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

அவர் விஷம் கலந்த ரசாயனப் பவுடர் வீசப்பட்டு கொல்லப்பட்டார் என விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவை சேர்ந்த இரண்டு பெண்களை மலேசியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக இரு பெண்களையும் முதல் முறையாக பொலிசார் மலேசியா நீதிமன்றத்தில் வரும் 28ம் திகதி ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.

இதனிடையில், கிம் நாமை வடகொரியா புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்