மலேசிய பள்ளியில் தீ விபத்து: 25 மாணவர்கள் உயிரிழப்பு

Report Print Deepthi Deepthi in மலேசியா

மலேசிய பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கோலாலம்பூரில் செயல்பட்டு வரும் Tahfiz Darul Quran Ittifaqiyah என்ற இஸ்லாமிய பள்ளியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், 23 மாணவர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். 5 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் தான் உயிரிழந்திருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை, மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் மோசமான தீவிபத்தாக கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பதிற்கு ஆழ்ந்த இரங்கலை மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்