ரோஹிங்கியா அகதி செய்த சட்டவிரோத செயல்: கடும் தண்டனை அளித்த நீதிமன்றம்

Report Print Raju Raju in மலேசியா
78Shares
78Shares
Seylon Bank Promotion

ரோஹிங்கியா அகதி ஒருவர் 20 அகதிகளை சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய உதவியதாக அவருக்கு ஏற்கனவே மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்டனை காலம் ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரோஹிங்கியா அகதியான முகமது ஹுசைன் (30) கடந்த 2015-ல் வங்கதேசம் மற்றும் மியான்மரை சேர்ந்த 20 அகதிகள் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய உதவியதுடன் அவர்களை பாதுகாப்பாக தங்கவும் வைத்தார்.

இதையடுத்து அந்தாண்டு யூன் 2-ஆம் திகதி ஹுசைனை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

நீதிமன்றம் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள நிலையில் தற்போது தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், ஹூசைன் செய்த தவறுக்கு அவரின் தண்டனை காலத்தை உயர்த்த வேண்டும் என மலேசிய நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து ஹுசைனின் சிறை தண்டனையை மூன்றாண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளாக உயர்த்துவதாக நீதிபதி தற்போது உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனேவே கடந்த மாதம் 15-ஆம் திகதி முகமது ஹூசைனின் நண்பர் முகமது யூனிஸ் என்பவருக்கு இதே போன்ற செயலை செய்ததாக நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனையை ஐந்தாண்டுகளாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்