21 ஆண்டுகளுக்கு முன் காதலன் துண்டுதுண்டாக வெட்டி கொலை: காதலி சடலமாக மீட்பு

Report Print Deepthi Deepthi in மலேசியா
285Shares
285Shares
ibctamil.com

21 வருடங்களுக்கு தனது காதலனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்மணி மலேசியாவில் இறந்துள்ளதாக புகைப்படம் வெளியாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த Omana Edadan என்ற பெண்மணி 1996 ஆம் ஆண்டு யூலை 11 ஆம் திகதி, தனது காதலனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து அதன் பாகங்களை ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வீசியுள்ளார்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது, மேலும் தனது காதலனுக்கும் ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில், அவர் தன்னைவிட்டு பிரிந்து செல்ல முயற்சித்ததால் உணவில் விஷம் வைத்து தனது காதலனை கொலை செய்துள்ளார்.

அதன்பின்னர், உறுப்புகள் மற்றும் எலும்புகளை சிறு துண்டுகளாக வெட்டி சில பாகங்களை ஊட்டி மலைப்பகுதியிலும், எஞ்சிய பாகங்களை கொடைக்கானல் மலைப்பகுதியிலும் வீசியுள்ளார்.

இதில், கொடைக்கானல் பகுதியில் உள்ள பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இவரின் கார் ஓட்டுநர் இவருக்கு எதிராக காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்ததையடுத்து, Omana கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் சென்னை சென்ட்ரல் சிறையில் அடைக்கப்பட்ட இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு பெயிலில் வெளிவந்தார்.

பெயில் முடிந்து மீண்டும் சிறைக்கு சென்ற இவர், சிறையில் இருந்து தப்பித்தார், இதனைத்தொடர்ந்து இவரை தேடு முயற்சியில் ஈடுபட்ட பொலிசார், அனைத்து பத்திரிகைகளிலும் இவரது புகைப்படத்தை வெளியிட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்நிலையில் மலேசியாவில் கடந்த ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த இப்பெண், கட்டிடத்தில் இருந்து கீழே விழந்து இறந்துள்ளார். இறந்துகிடந்த நிலையில் இவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இவரின் புகைப்படம் மற்றும் பெயர் தெளிவாக உள்ள நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் டிஎன்ஏ சோதனைக்கு பின்னர் இதனை உறுதிப்படுத்தலாம் என கேரள பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்