மலேசியாவில் பட்டப்பகலில் தமிழ் பெண்ணை காரில் கடத்திச் சென்ற மர்ம நபர்

Report Print Arbin Arbin in மலேசியா
156Shares
156Shares
ibctamil.com

மலேசியாவில் பட்டப்பகலில் பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைராகியுள்ளது.

மலேசியாவில் கிளாங் மாகாணத்தில் பணியிடத்தில் இருந்து பெண் ஒருவரை ஏமாற்றி வெளியே வரவழைத்து காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு பார்சல் ஒன்று வந்துள்ளதாக கூறி நபர் ஒருவர் அவரின் பணியிடத்தில் இருந்து வெளியே அழைத்துள்ளார்.

அவரும் வந்தவர் உண்மையான பார்சல் டெலிவரி செய்பவர் எனக் கருதி தமது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இதனிடையே குறித்த பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கி அந்த நபர் காருக்குள் திணித்துள்ளார். அதன்பின்னர் உடனடியாக அங்கிருந்து அவர் புறப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த நபர்கள் இருவர் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

கடத்தப்பட்ட பெண் இரு குழந்தைகளுக்கு தாயார் எனவும் கடத்தல் தொடர்பாக அவரது சகோதரர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

குறித்த பெண் தமிழர் எனவும் அவரது சகோதரர் பெயர் நந்தா என மட்டும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே காரில் கடத்தப்பட்ட பெண்ணை தாக்கிவிட்டு சாலை ஓரத்தில் இறக்கிவிட்டு அந்த மர்ம நபர் தப்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தற்போது மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகள் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட நபர் இந்தியர் எனவும், வாகனத்தின் பதிவு எண்களை வெளியிட்ட அவர், தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்