மகளை நான்கு ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தைக்கு 115 ஆண்டுகள் சிறை

Report Print Raju Raju in மலேசியா
697Shares
697Shares
ibctamil.com

மகளை நான்கு ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்த தந்தைக்கு 115 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாட்டின் குவாந்தான் நகரில் 53 வயதான நபர் தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

மீனவரான ஐந்து பிள்ளைகளின் தந்தை தனது 20 வயது மூத்த மகளை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்த விடயம் மகளின் தாய்க்கு தெரிந்தும் கணவர் மீதுள்ள பயம் காரணமாக அவர் தடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த மாதத்திலிருந்து இரண்டாவது மகளுக்கும் தந்தை பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார்.

தான் பட்ட கஷ்டத்தை தனது சகோதரியும் அனுபவிக்க கூடாது என நினைத்த மூத்த மகள் தைரியத்தை வரவழைத்து கொண்டு தனது தந்தையின் செயல் குறித்து பொலிசில் கடந்த 13-ஆம் திகதி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தந்தையை உடனடியாக கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து 115 ஆண்டுகள் சிறை தண்டனையும், 24 பிரம்படியும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்