மாயமான விமானத்தை தேட மலேசிய அரசு ஒப்பந்தம்

Report Print Arbin Arbin in மலேசியா
62Shares
62Shares
ibctamil.com

கடந்த 2014ம் ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான விமானத்தை தேட தனியார் நிறுவனத்துடன் மலேசிய அரசு ஒப்பந்த செய்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு மலேசிய விமானம் புறப்பட்டுச் சென்றது.

ஆனால், சில மணி நேரங்களில் அது மாயமானது. அதன் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை.

ஆழ்கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால், அதை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் அவுஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாடுகள் ஈடுபட்டன.

தெற்கு இந்திய பெருங்கடலில் நடந்த இந்த தேடுதல் பணி, கடந்தாண்டு ஜனவரியில் முடித்து கொள்ளப்பட்டது.

மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர கிமீ கடல் பரப்பளவில் விமானம் தேடப்பட்டது. இந்நிலையில், இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியை கைவிட மலேசியா விரும்பவில்லை.

எனவே, மேலும் 25 ஆயிரம் சதுர கிலோ மீற்றருக்கு தேடுதல் பணியை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

இந்த தேடுதலை மேற்கொள்ள, அமெரிக்காவின் ஹூஸ்டனை சேர்ந்த, ‘ஓஷன் இன்பினிட்டி’ நிறுவனத்துடன் 70 மில்லியன் டொலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இது நேற்று கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டப் பிறகு மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோ டியாங் கூறுகையில், விமானத்தை 25,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தை கண்டுபிடித்தால் மட்டுமே நிறுவனத்துக்கு தொகை வழங்கப்படும் என்றார்.

மலேசியா - அமெரிக்க நிறுவனம் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

விமானத்தை முதல் 5 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் கண்டுபிடித்தால் 20 மில்லியன் டொலரும், 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்குள் கண்டுபிடித்தால் 30 மில்லியன் டொலரும்,

25 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்குள் கண்டறிந்தால் 50 மில்லியன் டொலரும் மற்றும் 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு அப்பால் கண்டறிந்தால் ‘ஓஷன் இன்பினிட்டி’க்கு 70 மில்லியன் டொலர் கட்டணம் வழங்கப்படும்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்