கொல்லப்பட்ட வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் வழக்கில் முக்கிய தகவல்

Report Print Raju Raju in மலேசியா
133Shares
133Shares
ibctamil.com

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சகோதரர் கிம் ஜாங் நம் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவரை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.

கிம் ஜாங் நம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் திகதி மலேசிய விமான நிலையத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

ரசாயன தாக்குதல் அவரின் இறப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டது, இந்த கொலை தொடர்பாக இந்தோனேசியாவை சேர்ந்த சிடி ஐஸ்யா (25) மற்றும் வியட்னாமை சேர்ந்த டோன் ஹவுங் (29) என்ற இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்தார்கள்.

ஆனாலும், கிம் ஜாங் நம்-மின் கொலையில் இன்னும் மர்மம் நீடித்து வருகிறது.

சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், வடகொரியா அரசு தான் அவரை கொலை செய்ததாக பலரால் ஊகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொல்லப்பட்ட கிம் ஜாங் நம், இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்னர் அமெரிக்கர் ஒருவரை மலேசியாவின் Langkawi பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரி வேன் அசிருல் நிசாம் இந்த தகவலை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

அந்த மர்ம நபரின் அடையாளங்கள் இன்னும் தெரியாத நிலையில் அவர் உளவாளியா என்பதும் தெரியவில்லை என நிசாம் கூறியுள்ளார்.

இந்நிலையில் கிம் ஜாங் நம்-ஐ சந்தித்த மர்ம நபர் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்