பிரபல மொடல் அழகி கொலை வழக்கு: சிக்குவாரா மலேசிய முன்னாள் பிரதமர்?

Report Print Deepthi Deepthi in மலேசியா

2006 ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள கொடூரமாக கொலை செய்யப்பட்ட மங்கோலிய மொடல அழகி கொலை வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) தோல்வியைத் தழுவியது.

எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார்.

மேலும், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பண கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.

இந்நிலையில், மலேசியா நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மொடல் அழகி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நசிப் ரசாக்கை தொடர்புப்படுத்தி, மறு விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அல்டன்ட்டுயா ஷாரிபு என்ற பிரபல மொடல் அழகிக்கும், பிரதமரின் நண்பர் அப்துலுக்கும் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மலேசியாவில் வைத்து மொடல் அழகி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2002-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் இருந்து மலேசியாவுக்கு இரு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கிய பேரத்தில் நடைபெற்ற ஊழலில் அப்துல் ரசாக் பகின்டாவுக்கும், அல்டன்ட்டுயா ஷாரிபுவுக்கும் பங்கிருந்ததாகவும், இந்த விவகாரம் வெளியே கசியாமல் இருப்பதற்காக அல்டன்ட்டுயா கொல்லப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நஜிப்பிடம், மொடல் அழகி கொலை குறித்து விசாரணை நடத்தி அவர் இதில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers