காணாமல் போன மலேசிய விமான விவகாரம்: மலேசிய அரசு முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in மலேசியா

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை அடுத்த வாரத்துடன் முடியும் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்ற எம்எச்-370 ரக விமானம் திடீரென மாயமானது.

கடலில் 1,20,000 சதுர கிமீ பரப்பளவில் விமானத்தின் தேடுதல் பணி நடந்தது. இதையடுத்து மலேசிய அரசு விமானத்தை தேட அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்தது.

நவீன தொழில்நுட்பத்துடன் அந்நிறுவனம் கடலில் தேடும் பணியை மேற்கொண்டது.

இந்நிலையில், மலேசியாவில் தற்போது பொறுப்பேற்றுள்ள மகாதிர் முகமது தலைமையிலான புதிய அரசு, இந்த தேடுதல் பணியை வரும் 29ம் திகதியுடன் கைவிட முடிவு செய்துள்ளது.

இது பற்றி மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் கூறுகையில், ஒப்பந்தப்படி இந்த தேடுதல் பணி கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிந்திருக்க வேண்டும்.

ஆனால், அது நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் திகதியுடன் இந்த தேடும் பணி நிறைவு பெறுகிறது என கூறியுள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers