மலேசியாவில் இருந்து வந்த நபரை விமான நிலையத்தில் வைத்து கடத்திய நபர்கள்: பின்னணி காரணம்

Report Print Deepthi Deepthi in மலேசியா

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய நபரை விமான நிலையத்தில் வைத்து கடத்தியுள்ளனர்.

கும்பகோணத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் வியட்நாமில் வேலை வாங்கி தருவதாக கூறி தனது ஊரை சேர்ந்த 7 பேரிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட இவர், மலேசியாவில் உள்ள முத்து என்பவரிடம் பணம் கொடுத்த நபர்களின் வேலைக்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்கும்படி கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் அனைவரையும் மலேசியாவுக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அங்கு முத்து என்பவரை சந்திக்க முடியவில்லை. சுமார் ஒருவார காலமாக மலேசியாவில் தங்கியிருந்து முத்துவை அனைவரும் தேடியுள்ளனர்.

ஆனால், அவர் கிடைக்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்களை டிக்கெட் போட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கே அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக மலேசியாவிலேயே தங்கி முத்துவை தேடியுள்ளார் தமிழ்செல்வன். இந்நிலையில் இன்று சென்னை வந்த தமிழ்செல்வனை விமான நிலையத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்செல்வனை கடத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்செல்வனின் சகோதரர் அளித்த புகாரை தொடர்ந்து பல்லாரம் சாலையில் தமிழ்செல்வனை காரில் கடத்திய 7 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers