மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மலேசியா

Report Print Kavitha in மலேசியா
31Shares
31Shares
ibctamil.com

மலேசியாவில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கும் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகளை நடைமுறைப்படுத்துவதையும் நிறுத்தி வைப்பதற்கு, மலேசிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்துடன், மலேசியாவில் மரணதண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய சட்ட அமைச்சர் லிய்வ் வுயி கெயொங் (Liew Vui Keong) ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கூடிய மலேசியாவின் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டமையை, அந்த நாட்டின் தொடர்பாடல் மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உறுதி செய்துள்ளார்.

மேலும் எதிர்வரும் திங்கள் கூடவுள்ள மலேசிய நாடாளுமன்ற அமர்வில், மரண தண்டனை ரத்து குறித்த உத்தேச சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்