மலேசியாவில் புதிய மன்னர்– யார் அவர் ?

Report Print Abisha in மலேசியா

மலேசிய மன்னராக இருந்த சுல்தான் முகமது அண்மையில் தனது பதவியில் இருந்து விலகியதை அடுத்து நாளை புதிய மன்னர் பொறுப்பு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியாவில் மன்னராக இருந்த சுல்தான் முகமது சில நாட்களுக்குமுன் தன்னைவிடவயது குறைந்த ரஷ்ய அழகியை திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து தொடர்ந்து சர்ச்சை கிளம்பியது, எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டார்.

இந்நிலையில் புதிய மன்னர் யார் என்று தெரியாமல்தொடர்ந்து குழப்ப நிலை நீடித்து வருகின்றது.

நாளை புதிய மன்னர் தேர்தெடுக்க வாய்புள்ளதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மலேசியாவில் உள்ள 9 அரச பரம்பரைகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும்5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னர் தேர்வு செய்யப்படுவார்.

நாளை பிரதம மந்திரி மகாதிர் மோகமத்தின் கூட்டணி அரசாங்கமாக அரியணையை ஏற்றுக்கொள்வர்கள். அதிகாரத்தில் பதவி மாற்றம் செய்யப்பட்டபின்னர், தங்களுக்கான வாக்குறுதிகளை ஏற்றுகொள்வார்கள்.பின் காலை 10:30 மணியளவில் மன்னர் தேர்தல் நடைபெறும்

மன்னர் தேர்வு முறைக்கு போட்டியிட்டு ஆட்சி அமைக்க விரும்பும் மன்னர்கள் போட்டியிடலாம். வேட்பாளர் ஆட்சியமைக்க 5 வாக்குகள் பெரும்பான்மை பெற வேண்டும்

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்