பிரித்தானியாவில் மலர்ந்த காதல்... தன்னை விட 13 வயது குறைவான பெண்ணை மணந்த இளவரசர்... வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in மலேசியா

மலேசியாவின் இளவரசர் தென்கூ முகமது பயஸ் பெட்ரா ஸ்வீடனை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மலேசிய இளவரசரான தென்கூ முகமது (45) தனது காதலியான ஸ்வீடனை சேர்ந்த லூயிஸ் ஜோஹன்சன் (32) என்பவரை வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.

பிரித்தானியாவில் ஒரு சமயம் லூயிஸ் பணிபுரிந்து வந்தார். அந்த சமயத்தில் இளவரசர் முகமது அங்கு படித்து கொண்டிருந்தார்.

அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது, ஆனால் இது எந்த வருடத்தில் நடந்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

முகமதுக்கும், லூயிஸுக்கும் பழங்கால அரண்மையான Istana Balai Besar-ல் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் 300 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்தின் போது மணமகள் லூயிஸ் குறைந்த அளவிலான நகைகளே அணிந்திருந்த போதிலும், அனைத்தும் மிக விலை அதிகமான ஆபரணங்கள் என தெரியவந்துள்ளது.

மலேசியா அல்லாத நாட்டை சேர்ந்த பெண்ணை மலேசிய இளவரசர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல.

கடந்த நவம்பர் மாதம் முகமதின் மூத்த சகோதரர் சுல்தான் (49), ரஷ்யாவை சேர்ந்த இளம் மொடல் அழகி ஒக்சனா (25) வை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்