நாய் என நினைத்து வீட்டில் கரடியை வளர்ந்து வந்த பாடகி

Report Print Vijay Amburore in மலேசியா

மலேசியாவில் நாய் என நினைத்து வீட்டில் கரடி குட்டியை வளர்ந்து வந்த பாடகி கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் பிரபல பாடகியான கோஸ்மோ (27) வீட்டின் ஜன்னலில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் கரடி ஒன்று எட்டி பார்த்து உறுமியுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண், "பாவம் உணவுக்காக இந்த கரடி அழுகிறது" என குறிப்பிட்டு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோவினை பதிவிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, விலங்குகள் நல ஆர்வலர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோஸ்மோ வீட்டிற்கு சென்ற பொலிஸார், சோதனை மேற்கொண்டு கரடியை மீட்டெடுத்தனர். மேலும் கோஸ்மோவையும் கைது செய்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோஸ்மோ, ஒரு நாள் இரவு நான் காரில் சென்றுகொண்டிருந்த போது, சாலையோரத்தில் கரடி ஒன்று பலவீனமாக கிடப்பதை பார்த்தேன்.

கரடியை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது என்பது எனக்கு தெரியும். அதனை நாய் என நினைத்து தான் வீட்டிற்கு எடுத்து வந்தேன். அதனை காப்பற்ற மட்டுமே விரும்பினேன். விற்பனை செய்வதற்கு அல்ல.

நான் அதனை கூண்டுக்குள் அடைத்து வளர்க்கவில்லை. அப்படி செய்திருந்தால் இன்னும் கொடூரமானதாக மாறியிருக்கும். நான் பாடல் பாடும் வேலையாக இரவு, பகல் அயராது உழைத்து வருகிறேன். இதில் எங்கே நான் விலங்குகளை விற்பனை செய்யப்போகிறேன்.

நான் வளர்ந்த ப்ருனோவால் பேச முடியும். அது கேட்கும்போது நான் உணவு கொடுப்பேன். அது ஒருமுறை சாக்லேட் சாப்பிட்டது.

இதுசம்மந்தமான வழக்கினை நான் எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers