ஒரு பவுண்டு உடல் எடை அதிகரிப்பு: விமான பணிப்பெண் வேலையில் இருந்து நீக்கம்!

Report Print Arbin Arbin in மலேசியா

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றிய பணிப்பெண் ஒருவர் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை பொறுத்தமட்டில் விமானப் பணிப்பெண்களின் உடல் எடை 59.8(132lbs) என இருத்தல் வேண்டும்.

ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக இதே நிறுவனத்தில் பணியாற்றிவரும் Ina Meliesa Hassim என்பவருக்கு சம்பவத்தன்று உடல் எடை 60.3 என பதிவாகியுள்ளது.

இந்த உடல் எடை அதிகரிப்பை ஒப்புக்கொள்ள மறுத்துள்ள மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

தமக்கு இழைக்கப்பட்டது அநீதி என வாதிட்ட மெலிசா ஹாசிம் தொழிலாளர்களுக்கான நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஆனால் மலேசிய நீதிமன்றம் இந்த வழக்கை வேலைவாய்ப்பின்மை சட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு கருதி விமான ஊழியர்களின் உடல் எடை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம் என்று மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

உலகின் முதன்மை விமான சேவை நிறுவனமாக தம்மை நிலைநிறுத்திக் கொள்ள, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2015 முதல் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விமானப் பணிப்பெண்களுக்கு விதித்துள்ளது.

மெலிசா ஹாசிம் விவகாரத்தில் அவரது உடல் எடையை குறைத்துக் கொள்ள மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் அவருக்கு 18 மாதங்கங்கள் கால அவகாசம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் உரிய் பரிசோதனைகளில் மெலிசா ஹாசிம் தோல்வியுற்றதாக சுட்டிக்காட்டியுள்ள விமான சேவை நிறுவனம், அதன் பின்னரே அவரை பணி நீக்கம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

உடல் எடை தொடர்பான கடும்போக்கு அநியாயமானது என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் லுஃப்தான்சா போன்ற பிற நிறுவனங்களில் அவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லை என்றும் ஹாசிமின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்