வெளிநாட்டில் இருக்கும் பலகோடி மத்திப்பு மிக்க ஆடம்பர குடியிருப்பை விற்க்கும் பிரித்தானிய கோடீஸ்வரர்!

Report Print Karthi in மலேசியா

பிரித்தானிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜேம்ஸ் டைசன், சிங்கப்பூரின் மிக விலையுயர்ந்த தனது அதி நவீன அடுக்குமாடி குடியிருப்பை விற்க திட்டமிட்டுள்ளார்.

வேக்கம் கிளினர் என்று சொல்லப்படும், சுத்தப்படுத்த பயன்படுத்தும் கருவியை கண்டுபிடித்த ஜேம்ஸ் டைசன், தனது விலையுயர்ந்த சிங்கப்பூர் குடியிருப்பு ஒன்றினை விற்பதாக அறிவித்துள்ளார்.

அந்நாட்டின் மிக உயரமான அடுக்குமாடி கட்டிடமான டான்ஜோங் பகரின் உச்சியில் உள்ள 3 மாடி குடியிருப்பை, கடந்த ஆண்டு இந்திய மதிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் கொடுத்து ஜேம்ஸ் டைசன் தம்பதி வாங்கியது.

இந்த கட்டிடத்தில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. 5 படுக்கையறைகள், நீச்சல் குளம், தோட்டம், சுரங்க அறை உள்ளிட்டவற்றை கொண்ட இந்த குடியிருப்பை வாங்கிய விலையை விட 15 சதவீதம் குறைவாக, இந்தோனேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு விற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்