மழைக் காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

Report Print Sahana in மருத்துவம்
மழைக் காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கோடை காலத்தை விட மழைக்காலம், குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும்.

குளிர் காலத்தில் முடிந்தவரை வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருப்பது அவசியம்.

ஒருவரால் அவரின் எதிர்ப்பு சக்தியை பொறுத்து குளிரை தாங்க முடியும். ஆனால் குளிரால் தொற்றும் தொற்றுக்கிருமியை சாதாரணமாக ஒதுக்க முடியாது.

குளிர், மழைக்காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக்கிருமிகள்தான். கோடை காலத்தில் வருவதை விட, ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை குளிர் காலத்தில் யாருக்கும் வரத்தான் செய்யும்.

  • எந்த ஒரு காலகட்டத்திலும் உடலுக்கு எல்லா வகையிலும் நல்லது பயக்கக்கூடியது குடிநீர்தான். மழைக்காலத்தில் பாதுகாப்பான நீராக குடிக்க சூடாக்கி குடிப்பதுதான் சரியானது.
  • ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை குடிக்கலாம். ஆனால், பலரும் ஏதோ காரணத்தால் அதை கண்டுகொள்வதில்லை. இது தவறானது; தண்ணீர் குடித்து வந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. பளபளப்புக்கும் இது ஒரு முக்கிய காரணம்.
  • மழை, குளிர் காலத்தில் இன்னொரு பிரச்சினை, வீட்டில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதிக்கப்படுவதுதான். அளவுக்கு அதிகமான நபர்கள் புழங்கும் அறையில் இருந்து எளிதாக தொற்றுக்கிருமி பரவி விடும். பலவீனமானவர்களை அது உடனே தொற்றி விடும்.
  • இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படிப்பட்டவர்களுக்கும் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். அதனால் தான் ப்ளூ காய்ச்சல், ஜலதோஷம் சுலபமாக பரவுகிறது.
  • குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது மிக முக்கியம். ஜலதோஷம், காய்ச்சல் வருவது பெரும்பாலும் அதனால்தான். அதோடு வெளியில் உள்ள உணவு பொருட்களை உண்பதை தவிர்க்கவும்.
  • தினமும் கிரீன் டீ குடித்து வந்தால் நல்லது. இதில் உள்ள ஆன்டி பாக்டீரியா பண்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments