இருமல், சளிக்கு நலம் தரும் வீட்டு மருந்துகள்

Report Print Deepthi Deepthi in மருத்துவம்

மழை மற்றும் குளிர்காலங்களில் சளி மற்றும் இருமல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் ஏராளம்.

இதற்கு மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் வீட்டிலேயே மருந்து தயாரித்து சாப்பிடலாம், இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் வராது.

முள்ளங்கியை சுத்தப்படுத்தி தோல் நீக்கிவிட்டு அறைத்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

வடிகட்டி எடுத்து, இருமல் இருக்கும்போது காலை, மாலை 50 மிலி எடுத்துக் கொள்ளவும். மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, தொண்டை கட்டுதல் ஆகியவை சரியாகும்.

இதேபோன்று வெற்றிலையை காம்புகள் நீக்கிவிட்டு அதனுடன் லவங்கம், ஏலக்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும், இதனை வடிகட்டி தேன் சேர்க்கவும்.

இருமல், மூச்சிரைப்பு, நுரையீரல் தொற்று போன்ற நோய்களுக்கு மருந்தாகிறது.

ஒரு ஸ்பூன் இஞ்சி சாறுடன் தேன் கலந்து குடித்தால் இருமல் சரியாகும், செரிமான கோளாறுகளுக்கு மருந்தாகிறது.

தேன், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இருமலும், சளியும் குறைந்துவிடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments