அல்சரை ஈஸியா குணப்படுத்தலாம்! அற்புதமான நாட்டு வைத்தியம்

Report Print Printha in மருத்துவம்
1071Shares
1071Shares
ibctamil.com

காரம், மசாலா நிறைந்த உணவுகள் சாப்பிடுதல், மதுபானம் அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டி, மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுதல், மனக்கவலை மற்றும் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமியின் தாக்கம் ஆகிய காரணத்தினால் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

எனவே அல்சரை எளிமையாக குணப்படுத்த சில அற்புதமான நாட்டு வைத்தியங்கள் இதோ..

அல்சரை போக்க என்ன செய்ய வேண்டும்?

  • 1/2 ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும்.

  • ஏலக்காய், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து, அதனுடன் இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, அதில் 2 கிராம் எடுத்து ஒரு நாளைக்கு 3 வேளைகள் சாப்பிட வேண்டும்.

  • மிளகை பொடி செய்து, அதில் 1/2 ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வர வேண்டும்.

  • பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் சேர்த்து உலர்த்தி பொடி செய்து, அதனுடன் சம அளவு சுக்குத்தூள், மிளகுத்தூள் கலந்து அதில் 1/2 ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும்.

  • சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை ஆகியவற்றை சம அளவு எடுத்து அதில் பால் விட்டு அரைத்து, அதில் சிறிதளவு எடுத்து பாலில் கலந்து குடிக்க வேண்டும்.

  • கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து, அதில் 1/2 ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்க வேண்டும்.

அல்சர் இருப்பவர்கள் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள்

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இளநீர், நுங்கு ஆகிய உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும்..

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments