காதினுள் ஏதேனும் பூச்சி நுழைந்து விட்டதா? உடனே இதை செய்யுங்கள்

Report Print Printha in மருத்துவம்

காதுகளில் பூச்சிகள் நுழைவதாலும், கிருமிகளின் தாக்குதலாலும், சில மருந்துகளின் நச்சுத்தன்மை ஆகிய காரணத்தினால் உட்காதின் ரத்தோட்டம் குறைந்து காது நரம்புகள் பாதிக்கப்பட்டு செவிட்டுத் தன்மை பிரச்சனை ஏற்படுகிறது.

எனவே காதுகளை கவனிப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

காதுவலியை போக்குவது எப்படி?
 • கடுமையான காதுவலி இருந்தால் 5-6 துளிகள் வெள்ளைப் பூண்டு சாற்றை காதினுள் விட்டால் உடனே காதுவலி குணமாகும்.
 • காதினுள் புழுக்கள் இருந்தால் அல்லது காதுவலி இருந்தால் சில துளி விநிகரை காதினுள் விட வேண்டும்.
 • வெற்றிலைச் சாற்றைப் பிழிந்து 2-3 சொட்டுக்கள் காதில் விட்டால் காதுவலி உடனே குணமாகும்.
 • வெள்ளைப் பூண்டை இடித்து பஞ்சு போல் செய்து மெல்லிய துணியில் முடிச்சுப் போட்டு அனலில் காட்டிப் பிழிந்து அந்த தைலத்தை 3-4 துளிகள் காதில் விட்டு வர காது மந்தம், வலிகள் குணமாகும்.
 • மல்லிகைப் பூவையும், அதன் இலையையும் சேர்த்து இடித்து சாறு பிழிந்து நல்லெண்ணைய் சேர்த்துக் காய்ச்சி அதை இரவில் காதில் 4 துளி விட்டு வர காதில் சீழ் வடிதல் நின்று விடும்.
 • மாதுளம் பழத்தின் சாற்றை சூடாக்கி அதில் 2 துளிகள் காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
 • ஊமத்தம் பூவைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அதில் 2 துளிகள் காதில் விட காது வலி குணமாகும்.
 • உரித்த வெள்ளைப் பூண்டை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி 2 துளிகள் காதில் விட்டு வர காது வலி நீங்கும்.
 • பெருங்காயத்தை நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து ஓரிரு துளிகள் காதில் இட காதுவலி குணமாகும்.
 • குழந்தைகளுக்கு காதுவலி ஏற்பட்டால் துளிச்சாறு, தேன், உப்பு மூன்றையும் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.
 • காதினுள் ஈ, கொசு புகுந்து விட்டால் குப்பைமேனி இலையில் சிறிது நீர் தெளித்துக் கசக்கி சாற்றைப் பிழிந்து அதில் 4 துளிகள் காதில் விட அவைகள் வெளியேறிவிடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்