ஆண்களைவிட பெண்களை அதிகமாக தாக்கும் நோய் எது தெரியுமா?

Report Print Gokulan Gokulan in மருத்துவம்

நம் உடம்பை உரு குடும்பமாக கருதினால் அனைத்து உறுப்புக்களுக்கும் அம்மா சிறு நீரகம் தான், அம்மாவிற்கு உரிய வேறு பல குணக்களும் சிறுநீரகங்களிற்கு உண்டு.

சிறுநீரகங்கள் உடலில் உள்ள சிறு நீரை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் , ரத்த அழுத்ததை சமச்சீராக வைத்திருப்பது, உடம்பிற்கு தேவையான தாதுக்களான சோடியம், பொட்டாசியம், கல்சியம் போன்றவற்றை சமச்சீராக பேணுவது போன்ற செயல்களை நம் உடலில் செய்வதும் சிருநீரகம் தான்.

அதோடு ரத்தத்தில் சிவபணுக்களின் உற்பத்திக்கு மூலகாரணமான எரித்தொபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்வதும், எலும்பு வட்டை ஆரோகியமாக கட்டிக்காப்பதும் சிறுநீரகங்கள் தான் என்பது ஆச்சரியமான உண்மை.

நம் உடம்பில் ஒன்றிற்கு இரண்டாக சிறுநீரகங்கள் இருப்பதால், ஒன்று பழுதடைந்தாலும் மற்றொன்று அதன் வேலையையும் சேர்த்து தான் செய்யும்.

பெரும்பாலும் சிறுநீரக நோய்கள் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது என்றாலும் சிறுநீரக நோய்கள் பெண்களைதான் அதிகமாக பாதிக்கின்றன.

மணமான புதிதில் பெண்கள் இந்த நோய்க்கு உள்ளாகின்றார்கள். ஏன் என்றால் பெண்ணின் ரகசிய பகுதி ஒரு மெல்லிய சவ்வு போன்ற பகுதியால் மூடப்பட்டிருக்கும். இந்த சவ்வு பகுதியானது உடலுறவின் போது கிழிக்கப்பட்டுவிடும். இதனால் அருகில் உள்ள சிறுநீர் பாதை வழியாக நோய்கிருமிகள் சிறுநீர் பையினுள் நுழைந்துவிடும்.

இதுதவிர கருத்தடை சாதனக்கள் பயன்படுத்துவோரிற்கும் இந் நோய்தொற்று ஏற்படும்.

முன்னதாக இயற்கையாக போர்வீரரகளாக செயல்படும் பக்டீரியாக்களை அழித்துவிட்டுதான் இந் நோய்கிருமிகள் வளர்கின்றன. அதாவது கருத்தடை சாதனங்களை பயன்படுத்தும்போது நன்மை தரும் பக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.

இது தவிர பள்ளி கல்லூரிகளிற்கு செல்லும் மாணவிகள் , வேலைக்கு செல்லும் பெண்கள், கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்கள் மற்றும் நீரிழிவு நோய்கள் உள்ள பெண்களிற்கும் சிறிநீர் தொற்று நோய் ஏற்படுவது ஆண்களைவிட அதிகம்.

அதோடு இயற்கை உடல் உபாதைகள், மாதவிடாய், பிரசவம், அபார்க்ஷன் போன்ற காரணங்களாலும் பெண்களிற்கு இந் நோய் ஏற்படுகின்றது.

இந் நோய்தொற்றை அலட்சியம் செய்தால் , அது நிரந்தரமாக சிறுநீரகங்களை செயலிழப்பில் கொண்டுபோய்விடக்கூடிய அபாயமும் உள்ளது.

குறிப்பு

இதனை முன்கூட்டியே தடுக்கவேண்டும் எனில் , போதுமான அளவும் தண்ணீர் குடிக்கவேண்டும்.

சுயமருந்துகள், வலிநிவாரணிகள், பெயர்தெரியாத நாட்டு மருந்துகள் என , எதையும் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடகூடாது.

குடிப்பழக்கம் , புகை பழக்கம் இருந்தால் அதை தவிர்க்கவேண்டும்.

சைவ உணவுகள் நல்லது, அளவான அசைவ உணவுகள் நல்லது.

அதோடு உண்வில் எவ்வளவு உப்பு குறைவாக சேர்க்க முடியுமோ அவ்வளவு நல்லது.

இந்த வழிமுறைகளை பின்பற்றினால் சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers