தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு உள்ளதா? ஈஸியான மருத்துவம் இதோ

Report Print Printha in மருத்துவம்
420Shares
420Shares
lankasrimarket.com

வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட்டவுடன் அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அது ஆபத்தில் சென்று முடிந்துவிடும்.

எனவே வயிற்றுப்போக்கை குணமாக்கும் எளிய சிகிச்சை முறைகள் என்னவென்பதை இங்கே பார்க்கலாம் வாங்க...

குழந்தைகளுக்கு
  • குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மாமரத்தின் உள்பட்டையை அரைத்து, குழந்தையின் வயிற்றில் தடவலாம்.
  • வாந்தியுடன் வயிற்றுப்போக்கு இருந்தால் 1½ நெல்மணி அளவு பொடித்த ஜாதிக்காய்ப் பொடியைக் கொடுக்கலாம்.
  • கோரைக் கிழங்கினைத் கொதி நீரிலிட்டு வேகவைத்து, 3 நெல்மணி அளவு, பாலில் கலந்து தினமும் இருமுறை கொடுக்கலாம்.
பெரியவர்களுக்கு
  • பெரியவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், ஓமம், இரட்டி மதுரம், கல்லுப்பு ஆகிய மூன்றையும் வெண்ணெய்யுடன் சேர்த்து, 2 கிராம் என்ற அளவில் 3 முறை தினமும் சாப்பிட வேண்டும்.
  • கடுக்காய்ப் பொடியை சுடுநீர் அல்லது மோரில் 20-30 கிராம் வரை 4 மணிக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்.
  • சுக்குப் பொடி கலந்த கஞ்சி குடிக்கலாம் அல்லது வெறும் சுடுநீரை மட்டுமே குடிக்கலாம்.

  • மருதாணி விதைகளை பொடித்து அதை நெய்யுடன் கலந்து பாக்களவு தினமும் 2-3 முறை சாப்பிட வேண்டும்.

  • மல்லி விதை போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீர், ஓம தண்ணீர் ஆகிய இரண்டையும் கலந்து அடிக்கடி குடிக்க வேண்டும்.
குறிப்பு

வயிற்றுப்போக்கு இருக்கும் போது உப்பு, மிளகு, வெல்லம், கோதுமை உணவு, பூண்டு, இளநீர், கரும்புச்சாறு ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்