10 கிராம்புகள் போதும்: இவ்வளவு பலன்களை பெறலாம்

Report Print Printha in மருத்துவம்

மருத்துவ மூலிகையான கிராம்பு சமையலில் நறுமண பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

இத்தகைய கிராம்பில் கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், விட்டமின் A, C போன்றவை ஏராளமாக உள்ளது.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கிராம்பை கஷாயம் செய்து குடித்து வந்தால் பல்வேறும் நற்பலன்களை பெறலாம்.

கிராம்பு கஷாயம் செய்வது எப்படி?

10 கிராம்புகளைப் பொடித்து துளாக எடுத்துக் கொண்டு அதை 4-5 கிராம்புடன் சேர்த்து மூன்று கப் தண்ணீருடன் 1 கப்பாக வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி அதில் வெல்லம் மற்றும் 1/4 டீஸ்பூன் வெண்ணெய் கலந்து குடிக்க வேண்டும்.

பலன்கள்
  • தொண்டை கரகரப்பு மற்றும் வலி பிரச்சனைகளுக்கு இதமளிக்கும்.
  • தோல் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.
  • முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்கும்.
  • கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைந்து விடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்