பல நோய்களுக்கு தீர்வளிக்கும் அற்புத செடி!

Report Print Kabilan in மருத்துவம்

Snake Plant என்று அழைக்கப்படும் பாம்பு கற்றாழை மூலிகை செடியாக விளங்குவதால், மூலம் உள்ளிட்ட பல நோய்களுக்கு தீர்வு தருகிறது.

பாம்பு கற்றாழை

இந்த செடியின் தோற்றம் ஆப்பிரிக்காவாகும். எனினும் இந்தோனேசியாவில் உள்ள மக்களால் இது பெரிதும் வளர்க்கப்படுகிறது. இது அலங்கார செடியாக வளர்க்கப்பட்டாலும், இதன் ஒவ்வொரு இலையிலும் ப்ரேக்ணன் க்ளைகொசைடு, விஷத்தன்மை கலவைகளை கரிம பொருட்களாக சிதைக்க உதவும்.

அத்துடன் பாம்பு கற்றாழை கார்பன்-டை-ஆக்ஸைடு, பென்சீன், பார்மல் டி ஹைடு, க்ளோரோஃபார்ம் மற்றும் ட்ரை-கோதிலீன் போன்ற நச்சு கலவைகளையும் சீர்குலைக்க உதவும்.

இந்த கற்றாழையின் மருத்துவ பயன்கள் குறித்து இங்கு காண்போம்.

மூலநோய்

பாம்பு கற்றாழை மூல நோய்க்கு சிறந்த நிவாரணியாகும். இது குடல் இயக்கத்தை சரிசெய்து, மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தை போக்கும். மேலும் இது உயர் நார்ச்சத்து கொண்ட மூலிகை என்பதால் ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

கூந்தல் பராமரிப்பு டானிக்

கூந்தலை இயற்கையான முறையில் மிருதுவாகவும், அழகாகவும் மாற்ற பாம்பு கற்றாழை பயன்படும். இது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பெருமளவில் பயன்படுகிறது. மேலும் கூந்தலை Fresh ஆக வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.

தலைவலி

தலைவலியை போக்க பாம்பு கற்றாழை செடி பெரிதும் பயன்படுத்தப்படும். இதனை பயன்படுத்துவதன் மூலம் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

நீரிழிவு

நீரிழிவு அபாயத்தை குறைப்பதில் பாம்பு கற்றாழையின் பங்கு மிக அதிகம். பாம்பு கற்றாழையின் சாற்றை பருகினால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து நீரிழிவு அபாயமும் வெகுவாக குறையும்.

கிருமி நாசினி

பாம்பு கற்றாழை ஒரு கிருமி நாசினி ஆகும். உடலில் காயம் ஏற்பட்ட இடங்களில் இந்த கற்றாழை சாற்றை தடவினால், வெளியில் இருந்து கிருமிகள் உள்ளே செல்லாமல் தடுக்க முடியும்.

வாசனை

பாம்பு கற்றாழை மாலையில் மலரும்போது ஒரு மிருதுவான வாசனையை வெளியிடும். இதன்மூலம் மன அழுத்தத்தில் உள்ளவர்கள் தங்களை அமைதிபடுத்திக் கொள்ளலாம். வாசனை திரவியமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

குளியலறை மற்றும் சமையலறையில் இருந்து வெளிப்படும் துர்நாற்றத்தையும் பாம்பு கற்றாழை போக்கும் தன்மைகொண்டது.

தாவர வேலி

சிலவகை தாவரங்களின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், பாம்பு கற்றாழையை வேலியாக பயன்படுத்தலாம்.

இதர பயன்கள்

பாம்பு கற்றாழை புகை, நச்சுக்காற்று போன்றவற்றை உறிஞ்சி பிராணவாயுவை அதிகளவில் வெளியிடும் தன்மைகொண்டது.

Electronic பொருட்களில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சுக்களையும் பாம்பு கற்றாழை எளிதில் உறிஞ்சிவிடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers