அடேங்கப்பா! இந்த சிறிய ஏலக்காயில் இவ்வளவு மருத்துவ பலன்களா!!

Report Print Kabilan in மருத்துவம்
512Shares
512Shares
lankasrimarket.com

நமது வீட்டு சமையலில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் பயன்படுத்தும் ஏலக்காயில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உட்பட ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.

உணவில் சுவையைக் கூட்டவும், மணத்தை அதிகரிக்கவும் பெரும்பாலும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாலை உபயோகப்படுத்தி செய்யப்படும் உணவுகளில் மணத்துக்காக ஏலக்காய் சேர்க்கப்படுகிறது.

ஆனால், இவற்றை தவிர ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணநலன்கள் அடங்கியுள்ளன. அவை என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.

புற்றுநோய்

ஏலக்காயில் இயற்கையாகவே புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. ஏலக்காய் தூள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும். குடல் புற்றுநோய் சிகிச்சைக்கு ஏலக்காய் உகந்ததாகும்.

இதய ஆரோக்கியம்

ஏலக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. அத்துடன் ஏலக்காயில் நார்ச்சத்து கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். இதன்மூலம் இதயம் ஆரோக்கியம் பெறும்.

மேலும், ஏலக்காய் அதிகமான ரத்த அழுத்தத்தை சரி செய்யும். கருப்பு ஏலக்காயில் உள்ள சத்துக்கள் இதயத்தில் ஏற்படும் ரத்தக் கட்டிகளை கரைக்க உதவுகின்றன.

ஜீரணத் தன்மை

உணவு உண்ட பின்னர் செரிமானத்தை அதிகரிக்க ஏலக்காயை பயன்படுத்தலாம். ஏலக்காய் வளர்சிதைமாற்றத்தை தூண்டுவதால், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொடுக்கும்.

மேலும், ஏலக்காய் பித்த அமிலத்தின் சுரப்பை தூண்டி செரிமானத்திற்கு உதவும். அத்துடன் நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிற இரைப்பை நோய்களை ஏலக்காய் தடுக்கிறது.

சிறுநீர் தூண்டல்

ஏலக்காயானது அதிகப்படியான பதற்றம் மற்றும் வலிப்பு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஏலக்காயை உட்கொள்ளும்போது நச்சுத்தன்மை அதிகளவில் வெளியேற்றப்படும். மேலும், இது சிறுநீர் தூண்டலை துரிதப்படுத்தும்.

மன அழுத்தம்

ஏலக்காயில் மன சோர்வை நீக்கும் தன்மை உள்ளது. தேனீருடன் ஏலக்காய் பொடியை சேர்த்து பருகி வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஆஸ்துமா

ஏலக்காய் இளைப்பு, இருமல், மூச்சு சீரின்மை, நெஞ்சு இறுக்கம், மூச்சு இரைப்பு போன்ற ஆஸ்துமா அறிகுறிகளுக்கு எதிராக போராடுகிறது. ஏலக்காயின் மூலம் மூச்சு விடுதலை எளிதாகி நுரையீரலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

நீரிழிவு

ஏலக்காயில் அதிகளவு மாங்கனீசு உள்ளதால், நீரிழிவு அபாயங்களை இது குறைக்கிறது.

பல் சிகிச்சை

ஏலக்காயில் நுண்ணுயிரிகளை அழிக்கக் கூடிய தன்மை உள்ளது. ஏலக்காயின் மணம் உமிழ்நீரை அதிகரிக்கச் செய்து பற்காரையை தடுக்கும். வாய் துர்நாற்றத்தை போக்கவும் ஏலக்காய் பயன்படுகிறது.

பசியின்மை

ஏலக்காயில் பசியை தூண்டும் பண்பு உள்ளது. எனவே, ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் எனும் பசியின்மை அறிகுறி நோய்க்கு ஏலக்காய் சிகிச்சை ஏற்றது.

விக்கல்

ஏலக்காயில் தசையை தளர்வாக்கும் பண்புகள் உள்ளதால், இது விக்கலை நிறுத்துகிறது. ஒரு தம்ளர் சுடு நீருடன் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடியை கலந்து, 15 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடிக்க விக்கல் நிற்கும்.

தொண்டைப் புண்

ஏலக்காய் வாந்தி உணர்வை நிறுத்துகிறது. தொண்டைப் புண் ஆறுவதற்கு இதனை இலவங்கப்பட்டை, கருப்பு மிளகுடன் சேர்த்து பயன்படுத்தலாம். எரிச்சலை குறைக்கவும் ஏலக்காய் பயன்படுகிறது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்