சித்தரத்தை இரகசியம்: வாயு கோளாறை சரிசெய்யுமா?

Report Print Jayapradha in மருத்துவம்

சித்தரத்தை என்ற அழகான பெயரை கொண்ட இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. சித்தரத்தை குறுஞ்செடிகளை எளிதில் வீடுகளில் தொட்டிகளிலேயே வளர்க்கலாம்.

இதன் பூக்கள் மிக அழகாக இருக்கும்.

வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு சித்தரத்தை நல்ல மருந்து. மேலும் சித்தரத்தை எந்த முறையில் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நன்மைகள்

  • சித்தரத்தை சிறுசிறு துண்டுகளாக்கி அதை இரண்டு டம்ளர் நீர்விட்டு, மூன்று மணி நேரம் ஊறவைத்து பின்பு அந்த கஷாயத்தைச் சாப்பிட்டால் இருமல் போகும்.

  • ஒரு டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து, காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு இருக்குக் கோழைச் சளியை வெளியேற்றி, இருமலைப் போக்கும்.

  • 10 கிராம் சித்தரத்தையை நன்கு இடித்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருக வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து.

  • வறட்டு இருமல், சூட்டு இருமலுக்கு, இந்தத் துண்டுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

  • மூட்டுவலிக்கும், ரூமட்டாய்டு மூட்டுவலிக்கும் அரத்தையையும் அமுக்கராங்கிழங்கையும் நன்றாக உலர்த்தி, பொடித்து வைத்துக்கொண்டு, கால் டீஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து, காலை, மாலை உணவுக்கு முன்னர் 45 நாட்கள் சாப்பிட வேண்டும்.

  • அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு, இரைப்பிருமல் எனும் ஆஸ்துமாவால் அவதிப்படுவோருக்கு, இந்தப் பொடியைக் கால் டீஸ்பூன் எடுத்துத் தேனில் குழைத்து, காலையில் உணவுக்கு முன்பு கொடுத்து வரலாம்.

  • 10 கிராம் அளவுக்கு கிழங்கை எடுத்து, அரைத்து, எலுமிச்சம்பழ சாற்றில் கலந்து, தேனும் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குறையும். பற்களும் பளிச்சிடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்