தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Report Print Jayapradha in மருத்துவம்
287Shares

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

ஆப்பிளில் அதிக அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் போன்ற உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன் எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது

அத்தகைய ஊட்ட சத்துக்கள் அதிக நிறைந்த அத்தகைய ஆப்பிளை தினமும் சாப்பிட்டால் என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பார்க்கலாம்.

கெட்ட கொலஸ்ட்ரால்

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகின்றது. எனவே இதனை தினமும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

அல்சீமியர் நோய்

ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

நீரிழிவு

இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க நீரிழிவு நோய் வரமால் தடுக்கின்றது.

உடல் வலிமை

ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்யூயர்சிடின் உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களின் வலிமை அதிகரித்து நுரையீரலுக்கு சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது.

பெருங்குடல் புற்றுநோய்

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்தானது பெருங்குடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை முற்றிலும் தடுக்க உதவுகின்றது

நோய் எதிர்ப்பு சக்தி

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. மேலும் உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.

கண்புரை

ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால் கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். எனவே தினமும் அதிகம் ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

அழகாக சருமம்

ஆப்பிளில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் சருமத்தை என்றும் இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதயம்

தினமும் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

ஆரோக்கியமான பற்கள்

ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.

ஆஸ்துமா

ஆப்பிளில் உள்ள பைட்டோ கெமிக்கல்களான ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ஃபீனோலிக் ஆசிட்டுகள், மூச்சுக் குழாய்களில் இருக்கும் அடைப்புக்கள் அல்லது அழற்சியை நீக்கி, ஆஸ்துமா ஏற்படுவதை தடுக்கும்.

பார்கின்சன் நோய்

ஆப்பிளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மூளையில் உள்ள டோபமைன் உருவாக்கும் மூளை செல்களை அழித்து உண்டாகும், பார்கின்சன் நோய் ஏற்படுவதை தடுக்கும்.

உயர் இரத்த அழுத்தம்

ஆப்பிளில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால் இதனை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சாப்பிட்டால் நல்லது.

எடை குறைவு

ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே எடை குறைய விரும்புவோர், ஆப்பிளை தினமும் சாப்பிடுவது சிறந்தது.

புற்றுநோய்

ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டுகளான க்யூயர்சிடின், நுரையீரல், மார்பகம் மற்றும் குடல் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

வலுவான எலும்புகள்

ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டான ஃப்ளோரிட்ஜின் மாதவிடாய்க்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் எலும்புப்புரை ஏற்படுவதை தடுத்து, எலும்புகளை வலுவடையச் செய்யும்.

மூளை

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் குறையும்.

பித்தக்கற்கள்

ஆப்பிளில் இயற்கையாகவே மாலிக் ஆசிட் மற்றும் இதர மென்மைப்படுத்தும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இவை பித்தப்பையில் பித்தக்கற்கள் உண்டாவதை தடுக்கும்.

குடலியக்க எரிச்சல்

அதிக நார்ச்சத்து ஆப்பிளில் இருப்பதால், இவை குடலியக்கத்தின் போது ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும்.

இரத்த சோகை

தினமும் இரண்டு முதல் மூன்று ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அனீமியா என்னும் இரத்த சோகையை சரிசெய்துவிடலாம். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்