தொப்பையை மிக விரைவாக குறைக்க இந்த 10 மூலிகைகள் மட்டும் போதுமாம்!

Report Print Jayapradha in மருத்துவம்

தொப்பையை குறைக்க என்ன செய்தாலும் பயன் தரவில்லையா? மேலும் இங்கு அத்தகைய தொப்பையை வேகமாக கரைக்க உதவும் 10 வகையான மூலிகைகளை பற்றி பார்ப்போம்.

செம்பருத்தி டீ

செம்பருத்தி பூவில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளதால் அதை காய வைத்து அதை கொண்டு தேநீர் தயாரித்து அருந்தினால் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து விரைவாக கொழுப்பை கரைக்கிறது. மேலும் டயாபெட்டீஸ் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கிறது.

புதினா

புதினா நமது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. எனவே புதினா தேநீர் அருந்தி வந்தால் நல்ல விதத்தில் கொழுப்பை கரைக்க முடியும்.

துளசி

துளிசி இலைகள் உடல் கொழுப்பு அதிகரிக்க காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கிறது. எனவே இந்த துளிசி இலைகளை சாப்பிடும் போது கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.

ஜின்ஸெங்

தினமும் ஜின்ஸெங் டீ அருந்தினால் அதில் உள்ள காஃபைன் என்ற பொருள் உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை விரைவாக கரைக்கிறது.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி மூலிகையில் உள்ள லிப்பாஸ் என்ற என்ஜைம் கொழுப்பு மூலக்கூறுகளை உடைத்து எளிதாக உடலில் கொழுப்பு தங்காமல் காக்கிறது.

கற்றாழை

கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீர்ச்சத்து நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது. எனவே தினமும் காலையில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.

பார்சிலி

பார்சிலி நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுப்பாட்டில் வைத்து உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பை ஆற்றலாக மாற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

டான்டெலியன்

டான்டெலியன் உடல் கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் உடல் எடையை குறைக்க இதை நாம் தேநீராகவோ அல்லது சாலட்டாகவோ எடுத்து கொள்ளலாம்.

விஷ்னு க்ரந்தி

விஷ்னு க்ரந்தி நமது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அவற்றை சுத்தப்படுத்துகிறது. மேலும் உடலில் தங்கியுள்ள கொழுப்பை குளுக்கோஸ் மற்றும் சர்க்கரையாக மாற்றி உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers