தொப்பையை 3 நாட்களில் குறைக்க இந்த ஒரு பானம் போதும் தினமும் அருந்துங்கள்

Report Print Jayapradha in மருத்துவம்

ஒருவரது உடல் பருமன் அதிகரிப்பதற்கு அல்லது குறைவாக இருப்பதற்கு மரபணுக்கள் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணம்.

அதோடு உடல் எடை அதிகரிப்பதற்கு உடலுழைப்பு இல்லாமை, மோசமான டயட் அல்லது உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் போன்றவைகளும் காரணங்களாகும்.

இஞ்சி உணவின் மணத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி உடல்நலத்திற்கும் மிக நல்லது. அத்தகைய இஞ்சியை வைத்து எப்படி தொப்பையை குறைக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • இஞ்சி- 1 சிறிய துண்டு

 • எலுமிச்சை- 1

 • பட்டை- 2 துண்டுகள்

 • புதினா இலைகள்- சிறிது

 • தண்ணீர்- தேவையான அளவு

தயாரிக்கும் முறை

 • முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இஞ்சி, பட்டை, புதினா போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

உடல் எடையை குறைக்கும் இஞ்சி டீ எப்படி தெரியுமா?

 • தினமும் 2-3 கப் இஞ்சியை டீயை 2-3 முறை குடியுங்கள். உணவுகளுக்கு இடையே சிறு இஞ்சி துண்டை வாயில் போட்டு மெல்லுங்கள் அல்லது துருவிய இஞ்சியை உணவுகளில் தூவி சாப்பிடுங்கள்.

 • இஞ்சி உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும். அதுவும் இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதோடு, பசியுணர்வைக் குறைக்கும்.

 • மேலும் இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைவதோடு, கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் தடுக்கப்படும்.

 • இஞ்சியை அடிக்கடி டீ அல்லது ஜூஸ் வடிவில் எடுத்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோய்களின் தாக்கம் தடுக்கப்படும்.

 • முக்கியமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் தசைப்பிடிப்பு பிரச்சனைகள் அகலும். மேலும் குமட்டல், தலைச்சுற்றல் பிரச்சனைகளும் நீங்கும்.

 • இஞ்சியை உட்கொண்ட பின், வயிற்றில் ஒருவித எரிச்சலுணர்வை சந்திக்கக்கூடும். ஏனெனில் இஞ்சி வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி சுத்தம் செய்து கொண்டிருப்பதால் தான் இது போன்ற எரிச்சலுணர்வு ஏற்படுகிறது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்