இனி இந்த செயல்களை காலையில் செய்யவே செய்யாதீங்க! தொப்பை வருமாம்

Report Print Jayapradha in மருத்துவம்

குண்டாக இருக்கும் அனைவருக்கும் ஒல்லியாக மாற சரியாக சாப்பிடாமல் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காதவாறு டயட் இருப்பார்கள். இது மிகவும் தவறான முறை.

மேலும் வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் நாம் தினமும் செய்யும் சில செயல்கள் தான்.

தண்ணீர்

தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்தால் உடலில் சேரும் கொழுப்புகளை தடுக்கவும் மற்றும் குடலில் உள்ள நச்சு பொருட்களை எளிதாக இவை வெளியேற்றி விடுமாம். மேலும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கு தொப்பை போடும்.

சூரிய ஒளி

காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருந்தால் அவை நமது உடலில் உள்ள கொழுப்புக்களை சற்று கரைய வழி செய்யும். மேலும் காலை வேளையில் சூரிய ஒளியை தவிர்ப்பவர்கள் குண்டாகி தொப்பை போட கூடும்.

காலை உணவு

காலை உணவை தவிர்த்தால் உடலில் குளுக்கோஸ் அளவு சமநிலையில் இருக்காது. எனவே, கொழுப்புகளை இவை குறைப்பதை மெதுவாக்கி விடும். ஆதலால், உங்களுக்கு தொப்பை சீக்கிரம் வந்து விடும்.

குளிர்பானம்

செயற்கை சர்க்கரை சேர்த்துள்ள பாக்கெட்டில் அல்லது பாட்டிலில் அடைபட்ட குளிர்பானங்களை தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்தால் உங்களின் உடல் எடை எகிறி கொண்டே தொப்பையை பெற கூடும்.

நொறுக்கு தீனிகள்

காலையில் எழுந்தவுடன் தேவையற்ற நொறுக்கு தீனிகளை பசிக்காக சாப்பிட்டால் கட்டாயம் உடல் எடை கூடி தொப்பை போட்டு விடும்.

தூங்குதல்

காலையில் நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு பசியின்மை ஏற்பட்டு, பிறகு ஒரே நேரத்தில் சமமற்ற உணவுகளை உண்பார்கள். இதனால் அவர்களுக்கு தொப்பை போடுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.

இசை

காலையில் எழுந்தவுடன் மணி கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஸ்மார்ட் போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தால் கட்டாயம் உங்களுக்கு தொப்பை வரும்.

உடற்பயிற்சி

தினமும் காலையில் சரியான உடற்பயிற்சி இல்லையெனில் உடல் எடை அதிகரித்து கொண்டே தான் போகும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers