பாதம் அடிக்கடி சில்லுன்னு இருக்கிறதா? இதோ வெளிப்படுத்தும் நோய்கள்

Report Print Jayapradha in மருத்துவம்

உடலில் மற்ற உறுப்புகளை விட சிலருக்கு கால் அதிகமாக குளிர்ந்து இருக்கும். இதை பலரும் சாதரணமான விஷயமாக கருதுவது மிகவும் தவறு. ஏனெனில் அது பல நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

ராய்னாட் நோய்

உடலுக்கு போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாமை, அதிக குளிர் மற்றும் மன அழுத்தம் ஆகிய காரணத்தினால் இந்த ராய்னாட் நோய் உண்டாகும்.

சருமத்தின் நிறம் மாறுவது, காலில் புள்ளிப் புள்ளியாக தோன்றுவது, கால் மரத்துப் போவது இதன் முக்கிய அறிகுறிகள். இந்நோய் தீவிரமடைந்தால் காலில் வலி, எரிச்சல் உண்டாகும்.

இந்நோயை தவிர்க்க குளிர்காலத்தின் ஆரம்பத்தில் சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். எப்போதும் காலை வெது வெதுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஹைப்போ தைராய்டு

தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் அதன் அறிகுறியாக கூட ஹைப்போ தைராய்டு வரலாம். தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பவர்களுக்கு அதிக குளிரை தாங்க முடியாது.

அதோடு, உடல் எடை அதிகரிப்பது, ஞாபக சக்தி குறைவு, பசியின்மை, கால் வலி, சருமம் வறண்டு போகுதல் ஆகியவை தைராய்டின் அறிகுறிகளாகும்.

அனீமியா

உள்ளங்கை மற்றும் உள்ள பாதம் அதிகமாக குளிர்ந்து போகுதல், அதிக சோர்வு, பசி, தலைவலி, சரும வறட்சி, அதிக உறக்கம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.

இந்த நோய் உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லையென்றால் ஏற்படும். அதுவும் லேசான குளிருக்கே கால்கள் சில்லிட்டுப் போகும்.

ஆர்டிரியல் நோய்

கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிடுதல், இதய வால்வுகளில் ஏதேனும் அடைப்பு அல்லது அதில் ரத்த ஓட்டம் சரியாக இல்லையென்றால் கால்கள் அதிகமாக குளிர்ந்து போகும்.

எனவே அதிக கொழுப்புள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்தால், இந்நோயின் தீவிரத்தை குறைக்கலாம்.

ஹைப்பர் ஹிட்ரோஸிஸ்

இந்த நோயின் அறிகுறியாக உள்ளங்கை மற்றும் கால்களில் அதிகமாக வியர்க்கும். இது நரம்புகளில் ஏற்படும் பிரச்சனையால் வருகிறது.

எனவே குளிர்ச்சி தரும் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

டயாப்பட்டிக் நரம்பு

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த நோயின் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. விரல் நுனியில் எரிச்சல், கால்களில் வலி போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.

எனவே அதிக நேரம் நீரில் கால் நனைவதை தவிர்ப்பதுடன், அதிக சூடான நீர் அல்லது அதிக குளிர்ந்த நீர் காலில் படும்படி இருக்கக் கூடாது.

நரம்புக் கோளாறுகள்

காலில் அதித வலி, கால் மரத்துப் போவது, உடலில் விட்டமின் குறைபாடு, சிறுநீரகம் மற்றும் கல்லிரல் நோய்கள் ஆகியவை நரம்பு பாதிப்பினால் உண்டாகும் அறிகுறிகள்.

இப்பிரச்சனை நம் உடலில் அதிகளவு நச்சுக்கள் இருப்பதாலும், மரபு ரீதியாகவும் ஏற்படும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers