வாழ்க்கை முழுக்க ரத்த அழுத்தமே வராமல் இருக்க இதனை செய்யுங்கள்!

Report Print Kabilan in மருத்துவம்

உயர் ரத்த அழுத்தத்தை வராமல் தடுக்கவும், குறைக்கவும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

உயர் ரத்த அழுத்தத்தை நிறுத்தும் உணவுகள் என்கிற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், ரத்த அழுத்தத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்து தெரிய வந்துள்ளது.

டயட் முறைகள்

ரத்த அழுத்தத்தில் குறைந்த சோடியம் Dash டயட் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. இந்த டயட் முறையை கையாள்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் வருவதும் குறைவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த டயட்டில் பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த பால் பொருட்கள், முழு தானியங்கள், மீன், கோழி இறைச்சி, பீன்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். 2-3 குறைந்த கொழுப்பு பால் பொருட்கள், 8-10 பழங்கள் மற்றும் காய்கறிகள் என அன்றாடம் சாப்பிட்டு வர வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இந்த அளவில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் போதுமானது.

புரதங்கள்

அதிகளவு கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்ற சத்துக்களை இந்த டயட் முறையில் பெறலாம்.

இவைகள் இணைந்து உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்க வாதம் வராமல் தடுக்கிறது. இவற்றின் ஆரோக்கியமான கூறுகள், உங்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்பது உறுதி.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்