அன்றாட வாழ்விற்கு அவசியமான சில எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள் இதோ!

Report Print Kavitha in மருத்துவம்

நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.

  • தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அவை ஆறியதும் நெஞ்சில் தடவ நெஞ்சி சளி குணமாகும்.
  • 10 துளசி இலை, சிறுதுண்டு சுக்கு மற்றும் 2 லவங்கம் ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும்.
  • சுக்கு, வெள்ளை மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
  • நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட தொடர் விக்கல் குணமாகும்.
  • சட்டியில் படிகாரத்தை போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட வாய் நாற்றம் குணமாகும்.
  • கரும்பு சக்கையை எரித்து சாம்பல் எடுத்து அதை வெண்ணையில் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு பிரச்சினைகள் குணமாகும்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பில்லை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி குடிக்க செரிமானம் நன்கு அடையும்.
  • மஞ்சளை அனலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். பின்பு அந்த சாம்பலை தேனில் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும்.
  • வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.
  • செம்பருத்தி இலையை காய வைத்து பொடி செய்து தினமும் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.
  • தினமும் மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் கலந்து சாப்பிட்டு வர சீத பேதி குணமாகும்.
  • கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவு எண்ணையில் காய்ச்சி தினமும் பூசி வர விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
  • வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
  • கருணைக் கிழங்கை கொஞ்சம் எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் வைத்து சாப்பிட்டு வர மூலம் பிரச்சினைகள் குணமாகும்.
  • வாழை தண்டை எரித்து அந்த சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தீப்புண் உள்ள இடத்தில் போட்டு வர விரைவில் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் ஆகியவை குணமாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers