உடம்பில் உள்ள அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் எளிய பாட்டி வைத்தியம் இதோ!

Report Print Kavitha in மருத்துவம்

பொதுவாக நம்மில் பலரும் சிறிய காச்சல் கூட வந்தாலும் அருகில் இருக்கும் மருந்து கடைகளில் வைத்தியரின் அனுமதியின்றி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடுவது உண்டு.

ஆனால் நமது முன்னோர் சிறிய நோய் முதல் பெரிய நோய் வரை அனைத்து நோய்களும் வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டே நோயை விரட்டினார்கள்.

அந்தவகையில் நமது முன்னோர்கள் நோய்களுக்கு காலங்காலமாக கையாண்டு வந்த நாம் வீட்டில் செய்ய கூடிய எளிய பாட்டி வைத்திய முறைகள் பற்றி பார்ப்போம்.

  • ஏலக்காய், கிராம்பு, வெற்றிலை கம்பு ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போட்டால் தலைவலி குணமாகும்.
  • எலுமிச்சம் பழத்தை உடல் முழுவதும் தேய்த்துக் கொஞ்ச நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
  • சிறிதளவு வேப்பமர பட்டையை எடுத்து அதை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்நீரில் குளித்து வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.
  • நீரில் மிளகுத்தூளும், கற்பூரத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து தண்ணீரைத் துணியில் நனைத்து சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தனம் கொடுக்க சுளுக்கு குணமாகும்.
  • ஏலக்காய் 15, வால்மிளகு 15 மற்றும் வெற்றிலை 3 ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வாந்தி நிற்கும்.
  • கொள்ளுக்காய், வேளைச்செடி வேர் , மிளகு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட கல்லீரல் வீக்கம் குறையும்.
  • ஓமம், சுக்கு, வெந்தயம், வசம்பு, வெள்ளைப்பூண்டு, திப்பிலி இவற்றை வறுத்து பொடித்து நீர் விட்டு காய்ச்சி கசாயத்தை குடித்தால் மந்தம் நீங்கும்.
  • முருங்கை இலை, கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து அந்த நீரை தினமும் 2 வேளை குடித்து வந்தால் பேருகால வலி குறையும்.
  • ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.
  • ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய், ஆகியவற்றை சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்