மலச்சிக்கலை போக்க பப்பாளி இஞ்சி ஜூஸை இப்படி செய்து குடிங்க!

Report Print Abisha in மருத்துவம்
179Shares

மலச்சிக்கல் பெரும்பாலானோர் எதிர் கொள்ளும் பிரச்னைகளில் ஒன்று. அதற்கான தீர்வு பப்பாளி ஜூஸ். அதை செய்யும் முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்.

  • பப்பாளி பழம் - 1
  • எலுமிச்சை பழம் - 1
  • இஞ்சி - சிறிய துண்டு
  • ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
  • தேன் - தேவையான அளவு

பப்பாளி பழத்தின் தோலை நீக்கி விட்டு, கொட்டையை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

அரைவையில் நறுக்கி பப்பாளி பழம், இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

சுவையான பப்பாளி இஞ்சி ஜூஸ் தயார்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்