20 வகை நோய்களை எளிய முறையில் விரட்ட வேண்டுமா? இதோ சில எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள்

Report Print Kavitha in மருத்துவம்

நமது முன்னோர்கள் நோய்களுக்கு காலங்காலமாக கையாண்டு வந்த நாம் வீட்டில் செய்ய கூடிய இயற்கை வைத்திய முறைகள் பற்றி பார்ப்போம்.

  • தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அவை ஆறியதும் நெஞ்சில் தடவ நெஞ்சி சளி குணமாகும்.

  • 10 துளசி இலை, சிறுதுண்டு சுக்கு மற்றும் 2 லவங்கம் ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும்.

  • சுக்கு, வெள்ளை மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

  • நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட தொடர் விக்கல் குணமாகும்.

  • சட்டியில் படிகாரத்தை போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினமும் மூன்று வேலை சாப்பிட வாய் நாற்றம் குணமாகும்.

  • கரும்பு சக்கையை எரித்து சாம்பல் எடுத்து அதை வெண்ணையில் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு பிரட்சனைகள் குணமாகும்.

  • ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பில்லை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி குடிக்க செரிமானம் நன்கு அடையும்.

  • மஞ்சளை அனலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். பின்பு அந்த சாம்பலை தேனில் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும்.

  • வெந்தியத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

  • செம்பருத்தி இலையை காய வைத்து பொடி செய்து தினமும் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

  • தினமும் மாலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் கலந்து சாப்பிட்டு வர சீத பேதி குணமாகும்.

  • கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவு எண்ணையில் காய்ச்சி தினமும் பூசி வர விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

  • சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு வடித்த கஞ்சியில் சேர்த்து மீண்டும் சுடவைக்கவும். பின்பு அவற்றை மூச்சிப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேலை தடவினால் மூச்சிப்பிடிப்பு குணமாகும்.

  • கமலா ஆரஞ்சை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து, தினமும் சோப்புக்கு பதிலாக உடம்புக்கு தேய்த்து குளித்தால் சரும நோய்கள் குணமாகும்.

  • வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

  • கருணைக் கிழங்கை கொஞ்சம் எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் வைத்து சாப்பிட்டு வர மூலம் பிரட்சனைகள் குணமாகும்.

  • வாழை தண்டை எரித்து அந்த சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தீப்புண் உள்ள இடத்தில் போட்டு வர விரைவில் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் ஆகியவை குணமாகும்.

  • ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து காலை மற்றும் மாலை என்று இருவேளை குடித்து வர மூக்கடைப்பு தொல்லை குணமாகும்.

  • எலுமிச்சம் பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வர வரட்டு இருமல் குணமாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers