தினமும் ஒரு கப் சோம்பு தண்ணீர்! கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்

Report Print Fathima Fathima in மருத்துவம்

உணவில் மணத்துக்காக பயன்படுத்தப்படும் சோம்புவில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

இதைக்கொண்டு தேநீர் தயாரித்து அருந்துவது உடலின் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.

குடல் மற்றும் உடலின் இதர பகுதிகளில் ஏற்படும் பிடிப்பை குறைக்கிறது, வலியை குறைக்க வேண்டுமென்றால் பிடிப்பை குறைக்க வேண்டியது முக்கியம்.

நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள் சோம்பு தண்ணீர் குடிக்கலாம், அதுமட்டுமின்றி வயிற்று உப்புசம் மற்றும் வாயு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புகளை குறைப்பதால் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அத்துடன் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கிறது.

வாய் துர்நாற்ற பிரச்சனையால் தர்மசங்கடத்தை சந்திக்கும் நபர்கள் இந்த டீயை குடிப்பது நல்லது.

உயர் ரத்த அழுத்த பிரச்சனையை சீராக்குகிறது, எனினும் இதற்காக மாத்திரை எடுத்துக் கொள்ளும் நபர்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பின்னரே சாப்பிடவும்.

தினமும் குடித்து வந்தால் சிறுநீரகங்களில் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டுவிடும்.

எனினும் கருப்பை வாய் புற்றுநோய் உள்ளவர்கள் சோம்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்